Primary tabs
பங்கம் - பங்கி; பிரிவு. ஏழுவிதபிரிவு உள்ளது சப்தபங்கம் எனப்பட்டது. இது சப்தபங்கி நயம் எனவும் வழங்கப்படும். அவ்வேழுவித பங்கங்களுக்கும் (பிரிவுகளுக்கும்) மூலகாரணமான சொற்கள் இரண்டு.அவை; உண்டு, இல்லை என்பன. உண்டு இல்லை என்ற முரண்பட்ட குணங்கள் ஒவ்வொரு பொருள்களிடத்தும் ஒவ்வொரு வகையினால் காணப்படுகின்றது. ஒரு குடத்தை நோக்கி, ‘ இது மண்ணாலானது; பொன்னாலானது அன்று‘ என்று கூறுிமிடத்து குடத்தில் மண்தன்மை உண்டு என்றும், பொன்தன்மை இல்லை யென்றும் விளங்குவது போல, ஒவ்வொரு பொருளிடத்தும் உண்டு இல்லை என்ற இருகுணங்களும் விளங்குகின்றதனை ஊகித்தறிக.பொருள், இடம், காலம், குணம் என்ற இந்நான்கையும் குறித்து இவ்வேறுபாடு உண்டாகின்றது.
என்னை யெனின், ஒருமனிதனைக்குறித்து இவன் மனிதனா? தேவனா? என்று கேட்குமிடத்து, ‘இவன் மனிதன்; தேவன் அல்லன்‘ என்று பொருளின் உருவத்தை (ஆக்ருதியை)க் குறித்தும், ‘இவன் இவ்விடத்திலிருக்கின்றான்; அவ்விடத்தில் (வேறு இடத்தில்) இல்லை‘ யென்றுஇடத்தைக் குறித்தும், ‘இவன் இன்று இவ்விடத்திலிருக்கின்றான்; நேற்று இல்லை‘ என்று காலத்தைக் குறித்தும், ‘இவன் இப்பொழுது அறிவாளியாகக் காண்கிறான்; இதற்குமுன் இங்ஙனம் இல்லை‘ என்று குணத்தைக் குறித்தும், ஒருமனிதனிடமே* உண்டு இல்லை என்ற இருதன்மைகளும் விளங்குவதறிக. இங்ஙனம் ஒருவகையால உண்டு, ஒருவகையால் இல்லை என்ற இவ்விருதன்மை
*
தன்பொருள் இடம், காலம், குணம் என்ற நான்கினாலும் உண்டு எனவும், பிறபொருள், இடம், காலம், குணம் என்ற நான் கினாலும் இல்லையெனவும் பெறப்படும்; இங்கு தன்குணம் பிற குணம் என்றதுநெருப்பிற்குள்ள வெம்மையை தன் குணமென் றும் தண்மையை பிறகுண மென்றும் கூறுப.