Primary tabs
பல் கால் பருகி - அடுத்தடுத்துக் கேட்டும், ஊடல் அங்கு இனிய -ஊடிய விடத்தும் (புணர்ந்தாற் போன்ற) இன்பந் தருகின்ற, மின்னின் ஓல்கிய - மின்னற் கொடி போல அசைந்தாடுகின்ற, மகளிர் - நாட்டியப் பெண்கள். ஆடும் -, நாடகம் - நடனத்தை, கண்டும் - விரும்பிப் பார்த்தும், சில நாள் செல்ல - இங்ஙனம் சில நாட்கள் கழிந்தேக, சென்றான் - அந்த வழியில் தானே இன்புற்றுச் செல்வானாயினான். (எ-று.)
யாசோதரன், மகளிரின் பண்ணோடியைந்த பாடலைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் நாட்களைக் கழித்தானென்க.
தோடு - பூவிதழ். துயரி - யாழ் நரம்பு, ‘கோதை தொடுத்த துயரி‘ (சீவக. 921.) என்று வருவது காண்க.‘ பாடலொ டியைந்த பண்ணி னிசைச் சுவை‘ யென்றது இசைக் கருவியும் கண்டப்பாட்டும் இணைந்து இசைக்கருவியோ கண்டப் பாட்டோ என்று விபரங்காண முடியாது இழைந்து நிற்பது, ‘செவ்வாய்திறந் திவள்பாடி ளாளோ, நரம்பொடு வீணை நாவி நவின்றதோ‘ என்றார் (சீவக. 658) திருத்தக்கதேவரும். ஊடலும் கூடுவதற்குக் காரணமான ஊடலாதலின், ‘இனிய‘ என்றார். ‘ஊடினும் புணர்ந்த தொத்தினிபவளுளாள்‘ என்றார் திருத்தக்க தேவரும். ‘மின்னற்கொடி போன்ற இடையுடைய மடவார் அசைந்தாடும் நாடகம்‘ என்று பொருள் கொண்டு, இடையின் மென்மையைக் குறிப்பாக வுணர்த்தினார் எனினுமாம். (15)
யசோதரன் பள்ளியறை சேர்தல்