Primary tabs
தாள் - மரணத்தை உண்டாக்கினாள்; (ஆதலின்), பெண்களில் கோதுஅனாளே - பெண்களுக்குள் சாரமற்ற இவ்வமிர்தமதியே, பெரிய பாவத்தள் - கொடிய பாபிஷ்டியாவள், என்றார் - என்று கூறி (உழையர்) வருந்தினர். (எ-று.)
கடையனை விரும்பிக் கணவனை விஷம் வைத்துக் கொன்ற இவளே கொடும்பாவி என்று உழையர் இகழ்ந்து கூறின ரென்க.
அமிர்தமதியின் தீய செயல்கள் பலவாதலின், ‘எண்களுக்கிசைவிலாத‘ என்றனர். பாகன் தொழுநோயால் காணச் சகியாதவனாயிருத்தலின், ‘கண்களுக்கு இசைவிலாத கடையன்‘ என்றனர், கோது குற்றமுமாம். கொலை முதலிய பாதகத்தை யுடையளாதலின், ‘பெரிய பாவத்தள்’ என்றனர்.பாகனைச் சேர்ந்திருப்பது, விஷம் வாங்கி வந்து கலந்துண்பித்தது முதலிய செயல்களை அறிந்த உழையரே இங்ஙனம் கூறினரென்க. ‘இனையன உழையர்‘ என்பர் (151) முன்னர்.(76)
விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக்
கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர
மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்
(இ-ள்.) தீது அகல் கடவுள்ஆக - தீங்குகளெல்லாம் அகன்ற தெய்வமாக, செய்தது - செய்துவைத்த, ஓர்ஒப்பற்ற, படிமையின்கண் - ப்ரதிமையினிடத்தில், காதரம் (செய்யும்) பய பக்தி, உலகு இதன்கண் - இவ்வுலகத்தில், கருதிய முடித்தல் கண்டும் - (மக்கள்) எண்ணிய கருமத்தைமுடித்தலைக் கண்கூடாகக் கண்டிருந்தும், தெரிவு ஒன்று இல்லார் - சிறிதும் அறிவில ராகிய இவ்வேந்தனும் தாயும், தேவிக்கு - சண்டமாரிக்கு, சேதன வடிவு - உயிர்ப் பொருளாகிய கோழியின் உருவத்தை, எறிந்தனர் - பலியிட்டனர், ஆதலால் - அதனால், இன்று - --, வந்தது - (இவ்வாறு)