Primary tabs
முடிவில், சிறப்புடை மரணம் இல்லை - (சமாதிமரணம்முதலிய) சிறந்ததொரு மரணம் நேரவில்லை; (ஆதலின்), செல்கதி என்கொல் - இனி இவன் அடையும் கதிதான்யாதோ ! என்றார் - என்று (அறிஞர்) பேசிக்கொண்டனர்.(எ-று.)
இவ்யசோதரன், அறம் பொருள் இன்பம் மூன்றிலும் நீதி தவறியதோடு நேர்மையான மரணத்தை யடையவில்லை; ஆதலின், இவன் அடையுங் கதி யாதோ என்று அறிந்தோர் இரங்கினாரென்க.
அறப்பொருள் நுகராமையும், அருந்தவரைக் காணாமையும் அறத்தில் தவறியதற்கும்; மறப்பொருளிலும் அரசியலிலும் மயங்கி மகிழ்தல் பொருளில் தவறியதற்கும், இளையர் போகத் திவறுதல் காமத்தில் தவறியதற்கும்கூறியதாகும். அறப்பொருள், ஈண்டு உண்மைப்பொருள். ஜீவன் முதலிய ஆறு பொருள்கள் (யசோ 1. அடிக்குறிப்பில் காண்க). (தமக்கு) நன்மை தீமை முதலியன நேர்ந்த போதிலும், சமானமான (சமதாபாவ) எண்ணமுடையதர்மத்தியானத்துடன் மரணமெய்துதலே சிறப்புடை மரணமாகும். இவ்யசோதரனும் அவன் தாயும் ஆர்த்தத்தியானத்துடன் மரித்தனராதலின் அவர்கள் மரணத்தினை, ‘சிறப்புடை மரணமில்லை‘ என்றனர். அருந்தவர்க்கு, உருபுமயக்கம். (78)
(இ-ள்.) இனையன -இவைபோல்வன பலவற்றை, உழையர் தாமும் - ஏவலாளர்களும்,எழில் நகரத்துளாரும் -அழகிய நகரத்துமாந்தர்களும், நினைவன நினைந்து-(அவரவர்தகுதிக்கேற்ப) நினைப்பவற்றை நினைந்து, நெஞ்சில் நெகிழ்ந்தனர் - மனம் இளகினவர்களாகி, புலம்பி வாட- புலம்பிவாட்டமுற, கனைகழல் அரசன் தேவி-ஒலிக்குங் கழலணிந்த