தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 202 -
160.
மன்ன னாகிய மாமயின்1 மாளிகை
 
தன்னின் முன்னெழு வார்க்குமுன்2 தானெழாத்
 
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்3
 
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .

(இ-ள்.) மன்னனாகிய மாமயில் - யசோதர மன்னானயிருந்த அழகிய மயிலானது,  மாளிகை - மாளிகையில், தன்னின்முன் எழுவாருக்கு - (முன்பு) தனக்குமுன் எழுந்திருக்கும் ஏவலர்க்கு, முன் - முன்னதாக, தான் எழா-(இப்பொழுது) தான் எழுந்திருந்தும், தன்னை  அஞ்சினர் தங்களை - முன் தன்னைக் கண்டு அஞ்சிய ஏவலரைக் கண்டு தான் வெருண்டு - (இப்பொழுது) தான் அஞ்சியும், இன்ன ஆற்றின் வளர்ந்திடுகின்றது - இம்முறையில் வளர்ந்துவருகின்றது.  (எ-று.)

மயில், அஞ்சி வளர்ந்திடுகின்ற தென்க.

யசோதரன், தன் அரண்மனையிலேயே மயிலாய் வளர்தலின், ‘தன்னின்... தான் வெருண்டு‘  என்றார். “அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும், எச்சமில”   என்றதனால் ஈண்டு இரண்டாம்  வேற்றுமை அச்சப்பொருளில் வந்தது.  எழா - எழுந்து; செய்யா வென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.               (6)

161. 
அஞ்சி லோதியர் தாமடி தைவரப்
 
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
 
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
 
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.

(இ-ள்.) அம் சில் ஓதியர் - அழகிய சிலவாகிய ஓதியையுடைய மகளிர், அடி தைவர - பாதங்களை வருட, பஞ்சி மெல் அணை  பாவிய - பஞ்சினாலமைத்த மெல்லிய அணையை விரித்த, பள்ளிமேல் - படுக்கையின் மேல், துஞ்சம் மன்னவன் - கண் உறங்கிய வேந்தனாகிய, மாமயில் - சிறந்த மயில், பூமிமேல் - (இப்பொழுது) தரையிலேயே, அஞ்சி-

 

1 மாமயில்.

2 வாருக்கு.

3 வெகுண்டு.

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:17:15(இந்திய நேரம்)