Primary tabs
இதுமுதல்
ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு
எண்ணியது
கூறப்படும்
(இ-ள்.) அத்தலத் தகர் - அவ்விடத்திருந்த (யசோதரனாகிய) ஆடு, ஆங்கு - அப்போது, அது கேட்டபின் - அவ்வந்தணர் கூறிய ஆசிமொழியைக் கேட்டவுடன், ஒத்த - (இவ்யசோமதி முதலியோர் தன் பந்து என்றறிவதற்கு) ஏற்ற, தன் பிறப்பு - (யசோதர மன்னாயிருந்த) தன்பிறவியினை, உள்ளி - (பழம் பிறப்புணர்வால்) நினைந்து, உளைந்து - வருந்தி, உடன் - அப்பொழுதே, இத்தலத்து இறை ஆன - இந்நிலத்திற்கு வேந்தனாகிய, மத்தயானையின் இசோமதி
மன்னவன் - மதத்தோடு கூடிய யானைகளையுடைய யசோமதியரசன், என்மகன் - என்மகனே.(எ-று.)
தகர் இவ் யசோமதி என் மகனே என்றெண்ணிய தென்க.
‘தகர' என்பது, ‘தன் உளம் நோக' (198) என்பதனோடு முடியும். ஈண்டு யசோமதி தன் மகனானதைமட்டும் கூறியது, மயில் முதலிய பிறவிகள் அறியவியலாது யசோதர மன்னானாயிருந்த பிறப்பொன்றுமட்டுமே உணர்ந்ததனால் என்றுணர்க. (37)
(இ-ள்.) இது என் மாநகர் உஞ்சயினிப்பதி - இந்நகர் எனது பெரிய நகரமாகிய உஞ்சயினி நகரமாகும்; இது என்மாளிகை ஆம் - இது யான் வசித்திருந்த அரண்மனையாகும், இது எலாம் - இவையாவும், என் உழைக்கலம்