தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 240 -

நான்காஞ் சருக்கம்

---:: ::---

220. 
செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
 
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச
 
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
 
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.

  (இ-ள்.) செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள் செறிந்த சோலையில், திருமணி வண்டும் - அழகிய நீலமணிபோலும் வண்டினமும், தேனும் - தேனினமும், கொந்துகள்  - பூங்கொத்துக்களை, குடைந்து - --,கூவும் -கூவுகின்ற, குயிலொடு - --, குழுமி ஆர்ப்ப - சேர்ந்து ஒலிக்க, தென்றல் - --, செந்துணர் அணைந்து - பூங்கொத்துக்களிலுள்ள தாதுக்களில் படிந்து, திசை திசைசென்று வீச - திசைதோறும் சென்று வீச, வளர்மதுப் பருவம் -இளவேனிற் பருவம், வந்து - வந்துதனால், எங்கும்- எவ்விடத்தும், உளம் மகிழ்ந்தது - உயிர்களின் மனம் மகிழ்ந்தது.

இளவேனிற்பருவம் வந்ததென்க.

புதைந்த - அடர்ந்த.   தேனும் வண்டும் வேறு வேறுஇனம். சீவக. 892 இன் உரை பார்க்க. வசந்த காலத்தில்மாவின் மொட்டுக்களைத் தின்று குயில் கூவுவதனால், ‘கொந்துகள் குடைந்து கூவுங் குயில்‘ என்றார்.யத்கோகில: கில மதௌ மதுரம் விரௌதி, தத் சாரு சூத கலிகா நிகரைக ஹேது‘ பக்தாமரம். 6. புனைந்த என்றும் பாடம்.

உளம் - உயிர்களின் உள்ளம்.  அளைதல் - படிதல்.                    (1)

221. 
இணர்ததை1 பொழிலி னுள்ளா லிசோமதி2 யென்னுமன்னன்
 
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
 
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டர்3
 
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.

 

1 தழை.

2 னிசோமதி.

3 வண்டர்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:23:28(இந்திய நேரம்)