Primary tabs
லியல்பு. அதிர்தல் - நடுக்குதல். ‘அதிர்வும் விதிர்வும்நடுக்கஞ் செய்யும்’ தொல்). கோள் - வலிமை. ஐம்பதின் இரட்டி - நூறு: இதனை, ஐந்தினால் பொருத (பெருக்க) வந்த தொகை: ஐந்நூறு. இனி, ஐந்தை ஐம்பதில் பெருக்கி இரட்டித்ததுவுமாம். ‘உடன் சென்று கவர்க’ என மாறுக. இனி, உடன் - ஒருங்கே யெனவுமாம். நந்துதல் -வளர்தல்: மிகுதல். ‘பெரியவர் கேண்மை பிறைபோல...நந்தும்‘ (நாலடி.125). கைமாறு கருதாமையின், ‘அருள் மழை பொழியும் நாதன’ என்றார். நாதன் - பவ்யர்களுக்கு நாதன். (39)
(இ-ள்.) அறப் பெருமை செய்துஅருள் - திருவறத்தின் பெருமையை அனைவர்க்கும்) உபதேசம் செய்தருள்கின்ற. தவப்பெருமை தன்னால் - தவத்தின் பெருமையினால், உறப் புணர்தல் அஞ்சி - (அவர்) அருகில் அணுகுவதற்குப் பயந்து, ஒருவிற்கண் - (சுற்றிலும்) ஒரு வில்லளவு தொலைவில், அவை - அவ்வேட்டை நாய்கள். நிற்ப - சூழ்ந்து நிற்க. கறுப்பு உடை மனத்து எழு கதத்து - (க்ருஷ்ண லேஸ்ய பரிணாமமென்ற) கறுத்த எண்ணமுடைய மனத்தே எழுந்த கொடுங் கோபத்தால், அரசன் - --, ஐயோ - --, மறப்படை விடக் கருதி - கொல்லும் ஆயுதத்தை அவர்மேல் செலுத்த எண்ணி, வாள் உருவுகின்றான்- உறையினின்றும்) வாளை யுருவலானான். (எ-று.)
நாய்கள் அஞ்சி விலகி நிற்பதைக் கண்ட அரசன், தானே கொல்லக் கருதி வாளை உருவினானென்க.
வில், நீட்டலளவை, கறுப்பு உடை மனம் - கரு நிறம்வாய்ந்த எண்ணம். வடமொழியில் க்ருஷ்ணலேஸ்யை யென்பர். மனத்தின் எண்ணங்கள் விரிவகையால் பலவிதமாயினும். தொகைவகையால் ஆறுவகையாகும். அவை:-