Primary tabs
கேவலஜ்ஞானம் என்பன. அவற்றுள் மதி்ஜ்ஞானம் - ஐம்பொறிகளினாலும் மனத்தினாலும் அறியும் அறிவு: கருதஜ்ஞானம் - நூலுணர்ச்சி : அவதி ஜ்ஞானம் முற்பிறப்புணர்ச்சி (முதலியன): மனப்பர்யயஜ்ஞானம் - (அவற்றோடு) பிறர் மனம் மொழி செயல்களின் சூட்சுமங்களையும் நன்கு அறியும் அறிவு: கேவலஜ்ஞானம் - சகலமும் அறியும் அறிவு. ஞானத்தின் வகையினை, ‘மதிசுத மவதி மாண்ட மனப்பச்சங் கேவலமாம்‘ (மேரு.1320) என்னுஞ் செய்யுளிற் கூறியதனால் அறியலாகும். மற்றும், அவதிஜ்ஞானம்: அவதிஜ்ஞானா வரணீய கரும (க்ஷயோபஸ்ம)த்தின் சக்தி ஏற்றத் தாழ்வினால், தேசாவதி ஞானம் ஸர்வவதி ஞானம் பரமாவதி ஞானம் என மூன்று வகைப்படும். அவற்றுள், தேசாவதி ஞானம் தேவர் நரகர்களுக்குப் பிறப்பைக் குறித்தும் மனிதர் விலங்குகளுக்குக் குணத்தைக்குறித்தும் எய்துவதாகும். இதனை, பவ ப்ரத்யயம் குணப்ரத்யயம் என்பர். பவப்ரத்யய விவரம்(யசோ 319) ஆஞ் செய்யுளுரையில் உணரலாகும். குணப்ரத்யயம் ஏற்பட்டதிலிருந்து, குறைதல், நிலைத்தல் முதலாகப் பல வேறுபாடுகள் உளவாகும். அவை, அனுகாமி, அனனுகாமி, லர்த்தமானம், ஹீயமானம், அவஸ்திதம், அநவஸ்திதம் என்று ஆறு பிரிவாகக் கூறப்படும். இவற்றின் விவரம் பஞ்சாஸ்திகாயம் முதலியவற்றுள் கண்டு தெளிக. (ஈண்டு உரைக்கில்பெருகும்.) சர்வாவதி, பரமாவதி ஞானங்கள் தூய முனிவர்களுக்கே எய்துவதாகும். புகழோங்கும் என மாறுக. ‘ஒன்றினுள்‘ என்றது, ப்ரம்ம கல்பத்தில் என்று முன்வருஞ் செய்யுளால் அறியலாகும். (58)
சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்
(இ-ள்.) அவன் - அசோகன், பிரமன் உலகு அதனுள் - பிரம்ம கல்பத்தில், அரு மணியின் ஒளி திகழும் அமரன் ஆகி -