Primary tabs
(அத்தீவினையினால்), முழுதும் - உடல்முழுவதும், தொழுநோய் ஆகி - குட்டநோய் பரவப் பெற்று, நஞ்சு அனைய வினை - நஞ்சுபோல் வருத்தும் தீவினை, நலிய தன்னை வருத்த, அருநரகின் வீழ்ந்தாள் - துன்பம் பொறுத்தற் கரிய நரகத்தில் (தலைகீழாக) வீழ்ந்து துன்புறுவாளாயினாள்.
மாமியுடன் கணவனைக் கொன்ற அரசி நரகத்தாழ்ந்தாளென்க.
சில்மொழி - சிறுசொல்: சிறிய அளவிற்பேசுஞ் சொல்.
(இ-ள்.) தாரோய் -பூமாலை யணிந்த மன்னவ, வெருள்செய் வினை தரும் துயரம் விளையும் நிலம் - அச்சந்தரும் தீவினைகளாலெய்தும் துயரம் விளையும் நிலமாகிய, நரககுழிகள் இவை - நரககுழிகளாகிய இவை, எழுவகை - ஏழுபிரிவினவாகும்: (அவற்றை), இசையத் தெருளின் - ஆகம முறைப்படி தெளி(ய வுரைப்போமா)யின், இருளின் இருள் - இருளினிருளும், இருள் -இருளும், புகையோடு - புகையும், அளறு - அளறும், மணல் - மணலும், பரல் - பரலும், மருள் செய் உருவினபொருளின் - கண்டவர் மனத்தை மருளச் செய்யும் உருவினவாகிய இரத்தினமும் ஆகிய இவற்றால், வருபெயரும் அவையே - ஏழாம் நரகத்திலிருந்து மேலே முறையே வரும் பெயரும் அவையேயாகும். (எ-று.)
இருளினிருள் முதலாக ஏழுநரகத்தின் பெயர் கூறினாரென்க. ஈண்டுக் கூறிய இருளிருள் முதலியன ஏழாம் நரகத்திலிருந்து மேலே மேலே உள்ள நரகங்களின் பெயர்வகையாகும். ‘வருபெயரும் அவையே‘ என்றது, இருளி னிருள். இருள், புகை, அளறு, மணல், பரல், மணிஎன்று அந்நரகங்களின் பெயர் வழங்கும் என்பதாம். வடமொழியில்,