Primary tabs
துயரத்தையுடைய அந்நாரகவுயிர்கள், ஒரு பதினொடு எழுகடல்கள் அளவும் - பதினேழு கடற்காலமான தம் வாழ்நாள் முழுவதும், புகை - (மேற்கூறிய நூற்றிருபத்தைந்தாகிய) யோஜனையளவு, என்றும் - எந்நாளும் (ஒழி வின்றி), பொங்கி உடன் விழும் - மேலெழுந்து உடனுக்குடன் தலைகீழாக விழுந்து வருந்தும். (எ-று.)
ஐந்தாம் நரகத்தில் 125 வில் உயரமுடைய நாரகர், தம் வாழ்நாட்களின் எல்லையான பதினேழு கடலளவும் 125 யோஜனையுயரம் எழும்பித் தலைகீழாக வீழ்ந்து துன்புறுவர் என்க.
வில்லின் அளவு (125) புகைக்கும் கூட்டப்பட்டது. வில் - நீட்டலளவை. புகை - யோஜனை. கடல் - காலஅளவை. நரகவியல்பும் மேலெழுந்துவிழுதல் முதலியனவும் ஸ்ரீபுராணம் முதலியவற்றில் விரிவாகக் காணலாம். எழுந்து வீழ்தல் அந்நரகர்க்கு இயல்பான துன்பம். ‘எழுந்து வீழ்தல் நரகிடை மருவுந் துன்பம்‘ (மேரு, 472) என்றும், ‘பாவைதா னடித்த பந்திற் பாவிதான் புகையைந் நூற்றை, யோவிலாதெழுந்து வீழ்ந்து (மேரு. 889) என்றும் கூறியிருப்பன காண்க: ‘நரகர் பொங்கி உட்பட வெழுந்து வீழ்ந்து‘ (சீவக. 274) என்றார் திருத் தக்க தேவரும். ஐந்தாம் நரகத்துப் பிறந்த நாரகர்களுக்கு வாழ்நாள் பதினேழு கடல் என்பதனை, ‘ஒருபத்தேழ்... ஆழி‘ என்ற (மேரு. 937) கவியாலும் (யசோ. 37இன் உரையாலும்) உணரலாகும். உயர்ந்த: அன்சாரியை பெறாத பலவின்பாற்பெயர். ஐந்தாம் நரகத்திலுள்ள உயிர்கள் படுந் துன்பத்தைப் பொதுவாகக் கூறியதனால், இத் துன்பத்தை அமிர்த மதியும் அடைகின்றாளென்பது போதரும். (69)
(இ-ள்.) சுடரும் நெடு முடியோய்-ஒளி தங்கிய சிறந்தமுடியணிந்த வேந்தே, தொல்லைவினை நின்று - பழவினைகள் (உதயமாகி) தொடர்ந்து