தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


xix

தொண்டர் சீர் பரவுவார் அருளிய திருத்தொண்டர் புராணம் விரைவில் முற்றுப்பெற நாடொறும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த அநபாய சோழ மன்னரை ஒத்து அறநிலையப் பாதுகாப்பு ஆணையாளர் திருமிகு சாரங்கபாணி முதலியார், B.A.,B.L. அவர்கள் காஞ்சிப் புராணம் முற்றுப்பெறப் பொருளுதவி புரிவித்து அணிந்துரை உதவி வெளியீட்டு விழாவிற்கு முழு மனத்தொடும் துணைபுரியா நிற்கும் அவர் தமக்குச் செம்பொன்மலை வல்லி தழுவக் குழைந்த மணிமேனிப் பெரு வாழ்வினைப் பேரருள் புரிய வேண்டுவல்.

புலவர் முருகவேள், M.A., M.O.L. அவர்கள் தம் தந்தையாரொடு தொடர்பு முப்பதாண்டுகட்கு முன்பே வாய்த்தமையின் சிறிய பருவத்தே பெருந்தகைமையும் முதுக் குறைவும் கண்டு மகிழும் பேறுடையேன், அவர்தம் அணிந்துரை (‘திருக்கோயில்’ ஆசிரியர்) அப்பிரானருளுக்குப் பாத்திர ராக்குவிக்கும், அவர்க்கென் நன்றி கலந்த வணக்கத்தொடும் வாழ்வளிக்கத் திருவருளை வேண்டுகின்றேன்.

வள்ளலார் மாணவர் இல்லத் தலைவரும் குருகுலம் ஆசிரியரும் ஆகிய திரு. ‘அண்ணா’ நா. ப. தணிகை அரசர் அவர்கள் புரிந்த, புரியா நின்ற, புரிய உள்ள நலங்கள் பலப் பல. அந்நிலையில் வித்துவான் திரு. ம. எ. கிருட்டினசாமி (பெரியபாளையம் தலைமைத் தமிழாசிரியர்) அவர்களொடும் கற்பார்போலக் காட்டிக் கற்பித்தனரெனின் புனைந்துரையாகாது. இவர் தமக்கும் வழிவழியும் நன்றி செலுத்துதலையுடையோம் ,

அ. எ. த. அ. உலகநாத முதலியார், ஜவுளி , ஆடிசன்பேட்டை, காஞ்சிபுரம்.

உத்தமனே நல்ல உலகநாதச் செம்மால்
பத்தினியிற் சாலிநேர் பன்னியொடு-புத்திரரும்
வாழிஇரு செல்வநலம் வையத்தில் வாழ்வாங்குத்
தாழ்வின்றிச் சுற்றமுடன் றான்
சுபம்
-பொன். சண்முகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:05:40(இந்திய நேரம்)