Primary tabs
xL
வாரமாகித் திருவடிக்குப் பணிசெய்தொண்டர் பெறுவதென்னே
ஆரம்பாம்பு வாழ்வதாரூ ரொற்றியூரே லும்மதன்று
தாரமாகக் கங்கையாளைச் சடையில்வைத்த அடிகேளுந்தம்
ஊருங்காடு உடையுந்தோலே ஓணகாந்தன் றளியுளீரே. 9
ஓவணமே லெருதொன்றேறு மோணகாந்தன் றளியுளார்தாம்
ஆவணஞ்செய் தாளுங்கொண்டு அரைதுகிலொடு பட்டுவீக்கிக்
கோவணமேற் கொண்டவேடங் கோவையாகஆ ரூரன்சொன்ன
பாவணத்தமிழ் பத்தும்வல்லார் பறையுந்தாஞ்செய்த பாவந்தானே.
திருச்சிற்றம்பலம்
இது பொன்பெற்ற திருப்பதிகம்
உ
திருநாவுக்கரசு நாயனார்
திருக்கச்சிமயானம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என் றெழுதிக் காட்டொ ணாதே.
திருச்சிற்றம்பலம்.