தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam-திருத்தல விளக்கம்


திருச்சிற்றம்பலம்

திருத்தல விளக்கம்

 வலம்புரி விநாயகர்: தேவர்கள் தம் செயல்கள் இடையூறின்றி முற்றுப்பெறவும் அசுரர்தம் செயல்கள் இடையூறடைந்து முற்றுறாதொழியவும் அருளுதற்பொருட்டுத் தமக்கோர் கடவுளை அருளச் சிவபிரானை வேண்டினர். அருள்செய்து அத்திருமால் முதலானோரைப் போக்கி முத் தேவரையும், முச் சத்தியரையும் முறையே ஈன்ற சிவப் பிரணவத்தையும் சத்திப் பிரணவத்தையும் யானை வடிவுடையவாகக் கண்ட அச்சித்திரச் சாலையுள் அம்மை அப்பர் அவ்வடிவு கொண்டு கலந்து விநாயகரை அருளினர்; தலைமைப் பதவியையும் அவர்க்கு நல்கினர். ஓர்கால் விளையாட்டாக விநாயகப் பெருமானார் பாற்கடலை யுண்டுமிழ்ந்தவழி உட்புகுந்து வெளிவந்து வீழ்ந்து மயங்கிக் கிடந்த மால் இழந்த பாஞ்சசன்னியம் என்னும் வலம்புரியை வழங்கி வலம்புரி விநாயகராய் அத்திமலையில் திருமால் விருப்பப்படி எழுந்தருளியிருந்து அருள் புரிந்து வருகின்றனர்.

     இவ்வரலாற்றைக் கற்றவர், கேட்டவர், நல்லவரைக் கேட்பித்தவர் இடையூறுகள் தவிர்ந்து மக்கட் பேறு முதலாம் யாவும் பெற்றுப் பின் சிவபோகமும் பெறுவர்.

     திருநெறிக்காரைக்காடு: சிவி என்னும் இந்திரன் இருவினை ஒப்பும் மலபரிபாசமும், சத்திநிபாதமும் கைவரப் பெற்றுப் போகங்களை உண்டுமிழ்ந்த சோற்றினும் அருவருத்து வியாழ பகவானின் செவியறிவுறூஉப் பெற்று முன்னர் இந்திரபதவியை வழங்கிய அக்காரைக் காட்டீசரை வணங்கி முத்திசேரும் கணநாதர்தம் தலைவன் ஆயினன். இந்திரன் வழிபட்டமையால் இந்திரபுரம் எனவும் காரைமரங்களின் சூழலால் காரைக்காடெனவும் பெறும் அத்தலம். புதன் வழிபட்டுக் கிரகநிலை பெற்றமையின் புதன்கிழமை இந்திர தீர்த்தத்தில் மூழ்கிக் காரைக்காட்டீசரை வணங்குதல் சிறப்புடையது. காஞ்சியில் திருக்காலிமேடு என வழங்கும் அத்தலம் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரது திருப்பதிகத்தொடும் மேற்கு நோக்கிய திருமுன்புடையதாய்த் திகழும்.

     புண்ணியகோடீசர்: திருமால் பிரமனையும் பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பித் தனக்குப் பொற்றாமரைப் பொய்கையினின்றும் மலர் பறித்துதவிய கசேந்திரன் என்னும் யானை ஆதிமூலம் என்றலறப் பற்றிய முதலையைச் சக்கரத்தால் பிளந்து


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:16:08(இந்திய நேரம்)