தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


6
புலவர் குழந்தை
 
“பாவண மல்குமி ராவண காவியம்
நாவண மல்கிய நல்லா சிரியனும்
நலமலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான் அறிவுல கொப்பு மாறே
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக”

என்று புரட்சிக் கவிஞர் பாராட்டியுள்ளார்.

“இந்நூல் பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான
இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச் சுவை அறியாதார், கலையுணர்விலாதார்
என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின்
தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும்; நுண்ணிய புலமையும்; இனப் பற்றும்
ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புது வாழ்வுக்கான போர் முரசு; காவிய உருவில்
ஆரியத்தைப் புகுத்தி விட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று
இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும்
ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்” என்று பேரறிஞர்
அண்ணா பாராட்டுகின்றார்.

“இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம். வையகத்திற்கு
வாழ்நெறியுணர்த்த வந்த ‘வள்ளுவம்’ வாழ்விலக்கணம் என்றால்,
அவ்வாழ்விலக்கணத்தின் முழுநிறை வாழ்விலக்கியம் புலவர் குழந்தையவர்களின்
இராவண காவியம்” என்று முத்தமிழறிஞர் கலைஞரும் புகழ்ந்துரைத்துள்ளார்.

இந்நூல் முதன் முதலாக 1946இல் வெளிவந்தது. இந்நூல் 1948இல் தடை
செய்யப்பெற்றது. பிறகு 17-5-1971இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது
தடையை நீக்கப்பெற்றது.

இந்நூலுக்கு இட்ட தடையை நீக்குதல் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா,
முத்தமிழறிஞர் கலைஞர், நாரண துரைக்கண்ணனார், காஞ்சி மணிமொழியார்,
இரா.பி.சேதுப் பிள்ளை, புலவர் ஐயன் பெருமாள் கோனார், குத்தூசி குருசாமி,
நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகனார் முதலிய பெருமக்கள்
விரிவாக எழுதியுள்ளனர்.

இந்நூல், தமிழ்க் காவிய உலகில் ஒரு புதுமையான நூலாகும்.

இந்நூல் ஒரு புரட்சி நூல்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:36:58(இந்திய நேரம்)