தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய
ஏழாம் திருமுறை
தேவாரம்

மலேசியா, டான் ஸ்ரீ
திரு. மு. சோமசுந்தரம் அவர்களின்
அறக்கொடை

மலேசியா, திரு. மு.சோமசுந்தரம் என்ற டான் ஸ்ரீ எம். எஸ். சுந்தரம் பி. எஸ். எம்., ஜே.எம்.என்., கே. எம். என்., பி. ஏ., பி. காம்., அவர்கள், தேவகோட்டை முக.பெரி. முத்தையா செட்டியார் - சிவகாமி ஆகியோரின் மகன்; பள்ளத்தூர் சைவப் பெரியார் கா. இராமநாதன் செட்டியார் பி.ஏ., பி.எல்., அவர்களின் மருகர்; மலேசியா வருமானவரித்துறையில் அலுவலராகச் சேர்ந்து (1948 - 1976), தலைமை இயக்குநராக (1971 - 1976) ஓய்வு பெற்றவர். மலேசியா நிதி அமைச்சில் வரித்துறை ஆலோசகராக விளங்கியவர் (1976 - 1981).

மலேசியா அருள்நெறித் திருக் கூட்டத்தின் தலைவர், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் மலேசியாக் கிளையின் அறங்காவலருள் ஒருவர், கம்போங் பாண்டான் ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் அறங்காவலருள் ஒருவர், சைவப் பெரியார் கா. இராமநாதன் நினைவு அறக்கட்டளை நிதியின் அறங்காவலருள் ஒருவர், நா. தாமோதரம்பிள்ளை அன்னம்மாள் அறக்கட்டளை அறங்காவலருள் ஒருவர், மலேயா பல்கலைக் கழகத்திற்கு அகில மலேயா நாட்டுக் கோட்டைச் செட்டியார் பெரு நிதிப் பரிபாலனக் குழு உறுப்பினர், மலேயா பல்கலைக்கழகத்தில் கா. இராமநாதன் அறக்கொடைப் பரிபாலனக் குழு உறுப்பினர், என அறவோராகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவர்.

 



புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 10:03:05(இந்திய நேரம்)