தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


எப்படிப் பூசையைப் புரிவேன் என்ற எண்ணம் தோன்றவே, அதுபற்றி இறைவனிடமே முறையிட்டார்.

ஞானாசாரியனை அடைதல்

வேண்டத்தக்கது அறிந்து வேண்ட முழுதுந் தருவோனாகிய சொக்கநாதப் பெருமான் மறுநாள் கனவில் எழுந்தருளி ‘திருக்கயிலாய பரம்பரை - திருநந்தி மரபு மெய்கண்ட சந்தான வழியில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற ‘ஆசாரியரிடத்தில், வருகிற சோமவாரத்தில் ஞானோபதேசம் பெற்று நம்மைப் பூசிப்பாயாக’ என அருளினார். அன்றிரவே கமலை ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளி ‘ஞானசம்பந்தன் வருகிற சோமவாரத்தன்று வருவான்; அவனுக்கு ஞானோபதேசம் செய்து சிவபூசையும் எழுந்தருளுவிப்பாயாக’ என்று அருளினான். ஞானசம்பந்தர் பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு திருவாரூர் சென்று, பூங்கோயிலில் உள்ள சித்தீச்சரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்த கமலை ஞானப்பிரகாசரைக் கண்டார். காந்தம் கண்ட இரும்புபோல் ஆசாரியரால் ஈர்க்கப்பட்டார். சமய விசேட நிர்வாண தீஷைகளால் பாச ஞானம் பசுஞானங்கள் நீங்கிப் பதிஞானம் கைவரப் பெற்றார். சொக்கநாதப் பெருமானை ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாகப் பூசிக்கப்பெறும் பேற்றையும், ஞான அனுபூதியையும் அடைந்தார்.

கைவிளக்குப் பணிவிடை

பன்னாளும் ஆசாரியப் பணிவிடை செய்து தங்கி இருக்கும் நாட்களில் ஒருநாள் தியாகராசப் பெருமானின் அர்த்தயாம பூசையைத் தரிசித்து ஆசாரியர் தமது மாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது கைவிளக்குப் பணியாளன் உறங்கிவிட ஞானசம்பந்தர் தமக்கு ஞான ஒளியேற்றி நல்வழிகாட்டிய ஞானாசாரியருக்கு ஒளிவிளக்கு ஏந்தி முன் சென்றார். திருமாளிகையின் வாயில் முன்னர்ச் சென்றவுடன், சிவானுபூதியிலேயே திளைத்திருந்த ஞானப்பிரகாசர், அருள்நிலை கைவரும் பக்குவத்திலிருந்த ஞான சம்பந்தரை ‘நிற்க’ எனக் கட்டளையிட்டு உட்சென்றார். ஆசாரியர் பெற்ற சிவானுபூதியை ஞானசம்பந்தரும் கைவரப் பெற்றவராய் மாளிகை வாயிலில கைவிளக்கு ஏந்தியவராகவே நின்றார். ஞான சம்பந்தரின் பெருமையை ஞாலம் அறியச் செய்து அதன்மூலம் சைவப்பயிர் தழைக்க இளைவன் திருவுளம் பற்றினான் போலும். அன்றிரவு பெருமழை பெய்தது. சிவானுபூதியில் திளைத்திருந்த ஞானசம்பந்தர்மீது ஒருதுளி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 17:56:32(இந்திய நேரம்)