Primary tabs
இப்புராண
உரைவெளியீட்டின் நூலின் தொடக்க முதல் தில்லை
வாழந்தணர் சருக்கம் முடிய உள்ளபகுதி உரையின் முதற்பகுதியாகும்.
இதன் முதற்பதிப்பு உரையாசிரியர் சிவக்கவிமணி -> C.
K. சுப்பிரமணிய
முதலியார், B.A. அவர்களால் 1937 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
அப்பொழுது நூல் முழுவதற்கும் உரைஎழுதி முடிக்கப்பெறவில்லை. உரை
எழுத எழுத அச்சிடப்பெற்று அவை சஞ்சிகைகளாக உடனுக்குடன்
அன்பர்களுக்கு வழங்கப்பெற்று வந்தன. ஒவ்வொரு பகுதியும் அச்சிட்டு
முடிந்ததும் தனிப் பகுதியாக நூல் வடிவில் வெளியாயிற்று. இந்நிலையில்
முதற்பகுதி வெளிவந்த சில்லாண்டுகளிலேயே முற்றும் செலவாகி விரும்பி
வேண்டும் பல அன்பர்களுக்கும் உதவ இயலாத நிலையெய்திற்று. நூலின்
பிற்பகுதிகளுக்கு உரை எழுதுதலும் அவற்றை அச்சிட்டு வெளியிடுதலுமான
பெரும்பணி இருந்தமையால் முதற் பகுதியின் மறுபதிப்பு வெளிவராமலேயே
நின்றது. உரை வெளியீட்டின் இறுதிப் பகுதி வெளிவரும் பொழுது உரை
நூலின் முதற் பகுதியைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது பகுதிகளும்
செலவாகிவிட்டன. உரையாசிரியர் அவர்கள் தமது முதிர்ந்த பிராயத்தில்
இவற்றின் மறுபதிப்பு வேலையையும் தொடங்கி 1960ஆம்
ஆண்டில்
இம்முதற் பகுதியின் இரண்டாம் பதிப்பை வெளிக்கொணர்ந்தார்கள். அடுத்த
ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் சிவபதமடைந்து விட்டதால் ஏனைய
பகுதிகளின் மறுபதிப்புப் பணிகள் அவர்கள் விழுமிய மேற்பார்வையில்
வெளிவரும் பேற்றினை இழந்துவிட்டன.
இப்பணியைத்
தொடர்ந்து நடாத்தும் கடமை என் மேலதாயிற்று.
தமிழகம் முற்றுமுள்ள பல சைவத் திருமடங்கள், பல்கலைக்கழகங்கள்,
ஏனைய நிறுவனங்கள் எண்ணற்ற தனி அன்பர்கள் ஆகியோரின்
துணையுடன் முதற்பதிப்புப் பகுதிகளை வெளியிட்ட உரையாசிரியரின்
பெருமையையும், தன்னந்தனியாக இப்பணியை மேற்கொள்ள வேண்டிய
எனது சிறுமையையும் எண்ணி எண்ணி மயங்கினேன். நாட்கள் கழிந்தோடின.
உரையாசிரியரின் மிகப் பழைய அன்பர்கள் அவ்வப்பொழுது இப்பணியின்
பெருமையையும் இன்றியமையாமையையும் எடுத்துக்கூறி என்னைத் தொடர்ந்து
ஊக்குவித்தனர். அதன் காரணமாக இவ்வேலையைத் துணிந்து மேற்கொண்டு
இரண்டு முதல் ஆறுவரையுள்ள பகுதிகளை மறுமுறை வெளியிட்டேன்.
ஏழாவது பகுதி மறுபதிப்பாவதன் முன் முதற்பகுதியின் இரண்டாம் பதிப்புப்
பிரதிகள் முற்றும் செலவாயின. ஆதலின் இப்பணியை முதலில் மேற்கொண்டு
இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்து