தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

திருவடிச் சார்ந்து திருந்த வோதினோன்;
சைவம் மிகுந்த சதாசிவத் தோன்றல்
பௌவப் பிறவிப் பரிபவம் போக்க
மொழிந்த பொருளை முறையோ டுணர்ந்தோன்;
ஏனைய கலைகளோ டாங்கில முணர்ந்தோன்;
வழக்கு நெறியை வளமொடு பயின்று
ஒழுக்க நெறியினி லுறைப்புட னிற்போன்;
கனிந்த மனமுடன் கண்கணீர் மல்கத்
தொனிப்பொருள் பலவொடு தொண்டர்தங் காதை
காதலிற் கசிந்து கழறிடுங் கருத்தன்;
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாகிய
நாத னாம நயப்புற நவில்வோன்;
ஓது மறையினு மொளிதிகழ் திருமுறை
நாளு மோதிடும் நற்றவ; னன்பினால்
மெய்த்த ழைந்து விதிர்ப்புறு சிந்தையார்,
கைத்திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்,
இத்திறத் தவரன் றியும்மே தக்க
சீலமு நோன்புஞ் செறிவு மோங்கிடும்
முத்துக் கற்பக முனிவ ருணர்த்திய
வித்தகப் பூசை விறலுடன் புரிவோன்;
பேரூ ருறைவான் பட்டிப் பெருமான்
தேரூர் சிறப்பிற் சிறப்புகள் செய்வோன்;
பத்தர்சீர் பரவும் பண்பன்
மெய்த்தவன் சுப்பிர மணியன் றானே.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:39:15(இந்திய நேரம்)