Primary tabs
யேகம்பர் திருமேனி குழைந்த ஞான்று,
சமயமவை யாறினுக்குந் தலைவிக் கீசர்தந்தபடி யெட்டுழக்கீ ராழி நெல்லு
முமைதிருச்சூ டகக்கையாற் கொடுக்க வாங்கி,யுழவுதொழி லாற்பெருக்கி, யுலக மெல்லாந்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும், வேளாண்டலைவர்பெரும் புகழுலகிற் றழைத்த தன்றே.
விரிதிரைநீர்க் கடல், வருணன் கம்பு கட்டி,
கிளர்கலப்பை தரு, சுமையாள் சுவேத ராமன்,கிடாமறலி வசத்தீசன் வசத்தா, னென்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் பாமலளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
வொளிபெருகு கொழுமிகுதி யெறும்பீ றானவுயிரனைத்துந் தேவருமுண் டுவப்ப தன்றே.
வஞ்சனையால் வணிகனுயிரிழப்பத், தாங்கள்
கூறியசொற் பிழையாது, துணிந்து, செந்தீக்குழியிலெழு பதுபேரு முழுகிக், கங்கை
யாறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும், வேளாளர் பெருமை யெம்மாற்பிறித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ.
காராள ரணிவயலி லுழுது தங்கள் கையார நட்ட 2முடி திருந்தி லிந்தப், பாராளுந் திறலரசர் கவித்த வெற்றிப் பசும்பொன்மணி முடிதிருந்துங்; கலப்பை பூண்ட, வேராலெண் டிசைவளர்க்கும் புகழ்வே ளாள ரேரடிக்குஞ் சிறுகோலாற்றாணி யாளச், சீராரு முடியரசரிருந்து செங்கோல் செலுத்துவர்;வே ளாளர்புகழ் செப்ப லாமோ. 16
வாயிலார், சத்தியார், விறல்சேர் மிண்டர், வாக்கரையர், சாக்கியர், கோட்புலி, கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், முளைவித் தாக்கும் இளையான்றன் குடிமாறர், மூர்க்கர், செங்கைத், தாயனார், செருத்துணையார், செருவில் வெம்போர் சாதித்த முனையடுவா ராக நம்பி, பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மிற் பதின்மூவர் வேளாளர் பகருங் காலே. 17
அத்தகைய புகழ்வேளாண் மரபிற் சேக்கி ழார்குடியில் வந்தவருண் மொழித்தே வர்க்குத், தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந் தலைமையளித்தவர் தமக்குத் தனது பேரு, முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று முயர்பட்டங் கொடுத்திட வாங்கவர்நீர் நாட்டு, நித்தனுறை திருநாகேச் சுரத்தி லன்பு நிறைதலினான் மறவாத நிலைமை மிக்கார். 18
தம்பதிகுன் றத்தூரின் 3மடவ ளாகந் தானாக்கித், திருக்கோயில் தாபித் தாங்கட், செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போ லீதுந் திருநாகேச் சுரமெனவே,
1நீலி என்னும் பேய்மகள் சரிதம் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புரா - 3-ம் பாட்டிலும், திருஞானசம்பந்தர் திருவாலங்காட்டுப்பதிகம் முதற்பாட்டினும் குறித்தல் காண்க.
2 முடி - கோல் - உழவுவழக்குச் சொற்கள் சிலேடையா லரசாங்கத்திற்குக் கூறினார்.
3 மடவளாகம் - திருமதிலின் புறத்து அதனை அடுத்துச் சுற்றியுள்ள வீதி.