தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

வேறு

தில்லை யெல்லையில் வந்து, வந், தெதிர் தெண்ட னாக விழுந்,

தெழுந்

தல்லி சேர்கம லத்த டத்தினின் மூழ்கி, யம்பல வாணர்முன் னொல்லை சென்று, பணிந்து, கைத்தல முச்சி வைத்,துள முருகி,

நைந்

தெல்லை காணரி தாய பேரொளி யின்ப வாரியின் மூழ்கியே,
29
அடைய லார்புர நீறெ ழத்திரு நகைசெய் தன்றொரு மூவரைப் படியின் மேலடி மைக்கொ ளும்பத பங்க யங்கள் பணிந்து, நின்,

“ரடிகளே! யுன தடியர் சீரடி யேனு ரைத்திட வடியெடுத் திடர்கெ டத்தரு வா“ யெனத்,தி ருவருளை யெண்ணி,

யிறைஞ்சினார்.

30
அலைபு னற்பகி ரதிந திச்சடை யாட வாடர வாடநின் றிலகு மன்றினி லாடு வார்திரு வருளி னாலசரீரிவாக் “குலகெலா“ மென வடியெ டுத்துரை செய்த பேரொலி

யோசைமிக்,

கிலகு சீரடி யார்செ விப்புலத் தெங்கு மாகி நிறைந்ததால்,
31
தில்லை மாநகர் வாழ வாழ்தவ சிந்தை யந்தண ராறைஞ்ஞூ, றல்ல தும்பல மடப தித்1தவ, ராசரிக்கையி லுள்ளபேர் எல்லை யில்லவரியாவ ருங்களி கொளவி ளங்கசரீரிவரக் கொல்லை வந்தெழ வனைவ ருங்கர முச்சி வைத்துள

முருகினார்.

32
உள்ள லார்புர நீறெ ழக்கணை யொன்று தொட்டுயர்

மன்றில்வாழ்

வள்ள லார்திரு மாலை யுந்திரு நீறு மெய்ப்பரி வட்டமு 2மெள்ள லாரல ரென்று சேவையர் காவ லர்க்கிவை யினிதளித், தள்ள லார்வய னீடு தில்லையி லனைவ ருங்களி கொண்டபின்,
33
சேவை காவலர் தொண்டர் சீருரை செய்வ தற்குயர்

செய்யுண்முன்,

மூவ ரோதிய திருநெ றித்தமி ழாத லால்வரன் முறைமையால் யாவ ரும்புகழ் திருநெ றித்தலை வரைவ ணங்கி யிணங்கிமெய்த் தாவ ருஞ் 3சிவ சாத னங்க டரித்து நீறு பரித்தரோ,
34
வந்து சூழ நிரைத்த 4வையிரு நூறு கான்மணி மண்டபத் தெந்தை யார்திரு வருளை யுன்னி, யிருந்து, சேவையர் காவலர் செந்த மிழ்த்தொடை யால்வி ளங்கிய திருவி ருத்த நிருத்தனார் தந்த சொன்முத லாவெ டுத்தனர் தாணுவான புராண நூல்.
35

வேறு

திருமறையோர் புராணமவை பதின்மூன்று; சிவவே

தியரரனை வழிபட்ட புராண 5மோ ரிரண்டு;

குரைகழன்மா மாத்திரரொன்; றறுவர்முடி மன்னர்;

குறுநிலமன் னவரைவர்; வணிகர்குலத் தைவ;

1 தவராசாரிக்கை - தவாசிரமம். 2எள்ளலாரலர் = தரிக்கத்தக்கவர்.

3 சிவசாதனங்களாவன - முண்டனம், குண்டலம், சிரமாலை, கரமாலை, கண்டமாலை, தாழ்வடம் - முதலியன 50-வது பாட்டுப் பார்க்க. சிறப்புப்பற்றித் திருநீற்றை வேறு பிரித்துக் கூறினார்.

4 ஆயிரக்கான் மண்டபம் என்னும் இராச சபை.

5 மீரிரண்டு - என்ற பாடம் தவறு.  

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:10:29(இந்திய நேரம்)