Primary tabs
சைவகதை யினைவிளங்க விரித்துச் சொல்லச்,
சூழவிருந் தம்பலவ ரடியா ரெல்லாஞ்சுருதிமொழி யிதுவெனக்கை தொழுது கேட்டார்.
தன்மையா னுக்கிசைந்த பேர்வழியி னாளு
மாளுடைய பிள்ளையா ரவதரித்த நாளுமவரழுது திருஞான மமுதுசெய்த நாளுஞ்
சூளுடையா திரைநாளாஞ் சித்திரை யாதிரைநாட்டொடங்கியெதி ராமாண்டு சித்திரையா திரையி
னாளுடைய கதைமுடிப்ப மெனக்குன்றை வேந்தர்நடந்தவனை வருமிருந்து கேட்டனர்நா டோறும்.
திருநெறிய தமிழ்,மூவர் திருமந்திர மாலை,
யறப்பயனாங் காரைக்காற் பேயிரட்டை மாலை,யந்தாதி, மூத்தபதி கங்,கழறிற் றறிவார்
மறப்பரிய பொன்வண்ணத் தந்தாதி, திருமும்மணிக்கோவை, தெய்வவுலா, வையடிகள் வெண்பா,
வுறுப்பாகத், திருவிருத்த முடலரகப், பொருட்கோளுயிராக நாலடியா னடந்ததுல கெலாம்
லடியரள விறந்தபெயர் வந்தவர்க ளெல்லாஞ்
சென்றுறையத் திருமடங்க, டிருமடங்க டோறுந்திருவிளக்,கங் கவர்சாத்த வுள்ளுடை,மேற் போர்வை,
1
இதிற் கூறப்பட்டன மூவர் தேவாரங்களாகிய திருமறைக ளேழும்,
திருமூலர் திருமந்திரமாகிய பத்தாந் திருமுறை ஒன்றும், காரைக்காலம்மையா
ரருளிய அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டைமணிமாலை, மூத்த
திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்கள் நான்கும், கழறிற்றறிவார்நாயனார்
என்னும் சேரமான் பெருமாணாயனாரது பொன்வண்ணத்தந்தாதி,
திருமும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானவுலா என்ற பிரபந்தங்கள்
மூன்றும், ஐயடிகள் காடவர்கோனாயனாரது க்ஷேத்திர வெண்பா ஒன்றும்
ஆகிய இவைகளாம். இவர்கள் இப்புராணத்துக் கூறிய அறுபான்மும்மை
நாயன்மார்களில் இயலிசைத் தமிழ்ப் புலவர்பெருமக்களாவார்.
இத்திருப்பாட்டுக்கள் ஆளுடைய பிள்ளையார் முதலாயினார் சரிதங்களை
விளக்குதற்க் கருவிகளாயும் சிறந்த சரித ஆதாரங்களாயும் ஆங்காங்கும்
ஆசிரியராற் கொள்ளப்பட்டு இப்புராணத்தை அவர் அமைத்திருத்தலின்
இவை உறுப்பாக என்றார். இவற்றின் பொருள்களே இப்புராணத்தின்
பொருளா யமைதலின் பொருட்கோள் உயிராக என்றார். இவ்வுண்மையை
இப்புராணத்துள் தோடுடைய செவியன் முதலிய திருப்பதிகங்கள்
பலவற்றிற்கும் ஆசிரியர் சரிதத் தொடர்பும் உட்கோளும் கூறியிருத்தலும் ,
திருப்பாசுரத்திற்குப் பேருரை செய்திருத்தலும் முதலியவற்றா னறிக. இவற்றில்
தேவாரந் திருமந்திர நிற்க எஞ்சியவை பதினோராந் திருமுறையில்
நம்பியாண்டார் நம்பிகளாற் கோக்கப்பட்டதுங் காண்க. நடந்ததுஉல
கெலாம் என்றது, இப்புராணம் உலகிலே நின்றதெங்கும் நிலவி எனவும்,
ஆகுபெயராய் உலகெலாம் என்ற தொடக்கத்தையுடைய புராணம் நடந்தது
எனவும் இரு பொருளும் பெற அமைந்த அழகு காண்க.
மூவர் முதலிகள் - முதன்மையோராகிய ஆளுடையபிள்ளையார்
முதலிய மூவர்.