தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

மறைமுழங்க, விண்ணவர்கள் கற்பகப்பூ மாரி

மழைபொழியத், திருவீதி வலமாக வரும்போ,

திறைவர்திரு வருளைநினைந் தடலரசர் கோமா

“னீதுவன்றோ நான்செய்த தவப்பய?“ னென்

றிசைத்தான்.


87

வாரணத்தி லிவரைவரக் கண்டதிரு வீதி

மறுகுதொறுந் தூய்மைசெய்து வாழைகளு நாட்டிப்
பூரணகும் பமுமமைத்துப் பொரியுமிகத் தூவிப்

பொன்னரிமா லையுநறும்பூ மாலைகளுந் தூக்கித்
தோரணங்க ணிரைத்துவிரை நறுந்தூப மேந்திச்

சுடர்விளக்கு மேற்றியணி மணிவிளக்கு மேந்தி
யாரணங்கள் விரித்தோதி மாமறையோ ரெதிர்கொண்
      டறுகெடுப்ப வாழ்த்தெடுத்தா ரரம்பையர்க ளெல்லாம்.

88

வேறு

“காவல னாரிவர்; தவரிவர்; காவலர் கவரி யிடத்தகு மோ?“

வென்பார்;

“சேவையர் காவல னார்சிவ மான சிறப்பிது நல்ல சிறப்!“

பென்பார்;

“தேவரு மெழுதவொ ணாமறை யைத்தமிழ் செய்து திருப்பதி

கம்பாடு

மூவரு மொருமுத லாயுல கத்து முளைத்த முதற் பொருடா!“

னென்பார்.

89

மின்மழை பெய்தது மேக வொழுங்குகள்; விண்ணவர் கற்பக

விரைசேர்பூ

நன்மழை பெய்தனர்; சேவையர் காவலர் நாவலரின்புற

நாவாரச்

சொன்மழை பெய்தன;ரிரவலர் மிடிகெட வள்ளி முகந்தெதிர்

சோளேசன்

பொன்மழை பெய்தன;னுருகிய நெஞ்சொடு கண்மழை யன்பர்

பொழிந்தார்கள்,

90

“மதுர விராமா யணகதை யுரைசெய்த வான்மிக பகவணு

மொப்பல்ல;

விதிவழி பாரத முரைசெய்து கரைசெய்த வேத வியரதனு

மொப்பல்ல;

சிதைவற வாயிர நாவுட னறிவுள சேட விசேடனு மொப்பல்ல;
பொதிய மலைக்குறு முனிவனு மொப்பல புகழ்புனை குன்றை

முனிக்“ கென்பார்.

91

மெய்யுள சிவசா தனமும் வெளிப்பட வெண்ணீ றெழுகிய

கண்ணேறுங்

கையுந் திகழ்மணி கண்டமு மொளிதரு கவளிகை யும்புத்

தகவேடு

நையுந் திருவுள மழியுந் தொறுமா கரவெனு நாமமு

நாமமெல்லா

முய்யும் படியருள் கருணையு மழகி தெனத்தொழு தனருல

கவரெல்லாம்.

92

பூவை மறந்தனள் வெண்டா மரைமயில்; புகல்தரு சங்கப்

புலவோர்சொற்

பாவை மறந்தனள்; தேச சுபாடித பயனை மறந்தனள்;

பதுமத்தோ

னாவை மறந்தனள்; பொதிய மலைத்தலை நண்ணிய

புண்ணிய முனிவனெனுங்

கோவை மறந்தனள்; சேவையர் காவல னார் திரு நாவிற்

குடிகொணடாள்

93

இப்படி யிப்படி தன்னில் விதிப்படி யிம்பருமும்பரு

மேனோரு

மப்படி சூழ வாத்திரு வீதி வலஞ்செய் தணைந்தம்

பலமுன்றிற்

றப்பற யானையி னின்று மிழிந்தர சனுமுரை செறிசே

வையர்கோவு

முப்புரி நூன்மறை யோரொ டணைந்தெழு தியமுறை

யைத்திரு முன்வைத்தார்.

94

வேறு
அண்ட வாணரெதிர் தெண்ட னாகவனை வரும்வி ழுந்துபி

னெழுந்துசீர்

கொண்ட சேவைகுல திலக ருக்கனை வருங்கு றித்தெதிர்

கொடுத்தபேர்

தொண்ட சீர்பரவு வாரெ னப்பெயர் சுமத்தி, ஞானமுடி

சூட்டி, முன்

மண்ட பத்தினி லிருத்தி, மற்றவரை வளவர் பூபதி

வணங்கினான்.

95


புதுப்பிக்கபட்ட நாள் : 10-01-2019 18:47:55(இந்திய நேரம்)