தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

ஆய வேலையன பாய “னிந்நிலைமை யாத லாலனுசர் பாலறா
வாய் ரெங்குள?“ரெ னப், பணிந்திரு மருங்கு நின்றவர் விளம்புவார்;
“தூய குன்றைநகர் மீது தம்பெயர் துலங்கவோர்குள மமைத்தபி
னேய நாகையா னார்தி ருப்பணி யியற்றி யவ்விடை யிருந்தனர்“
98
என்று சொல்லவவர் தமைய ழைத்தரச “னிவர மைச்ச;ரிவர் பட்டமு
மன்றன் மாலைபுனை தொண்டை மா“ னென வகுத்த பின்,றமது

மண்டல

மன்று வற்பம்வர வந்த டைந்தவரை யாற்றல் செய்து, தொண்டை

மண்டல

நின்று காத்தபெரு மானெ னத்தமது பெயரை யெங்கணு நிறுத்தினார்.
99
தொண்டர் சீர்பரவு சேக்கிழார் குரிசி றூய தில்லைநகர் தன்னிலே
பண்டு மூவர்பதி கத்து வந்தவறு பத்து மூவர்கதை தனையுணர்ந்,
தண்ட வாணரடி யார்க டம்முட னருந்த வந்தனி லிருந்து,பி
னிண்டை வைத்தசடை யம்ப லத்தவ ரெடுத்த பாதநீழ லெய்தினார்.
100
வாழி தில்லைமணி மன்று ளென்றுநட மாடு மங்கணர் மலர்ப்பதம்!;
வாழி காழிநகர் வாழ வந்ததிரு நெறிய ராதிபதி வள்ளறாள்!;
வாழி யன்பர்திரு நீறு மிட்டதிரு முண்ட முந்துவய கவசமும்!;
வாழி குன்றைமுனி சேவை யாதிதிரு வாய்ம லர்ந்தருள் புராணமே!
101
தேசி லங்குமுகில் குன்றை யாதிபதி தொண்டர் சீர்பரவு சேக்கிழார்
வாச லன்றுமுத லின்று காறுமினி மேலும் வாழையடி வாழையாய்
வீசு தென்றன்மணி மண்ட பத்தரசு வீற்றி ருக்குமுடி மன்னருக்
கீச னன்பர்கள் புராண முஞ்சொலி யமைச்சு மாகிநல மெய்துமால்.
102
அண்ட வாணர்தொழு தில்லை யம்பலவ ரடியெ டுத்“துலகெ

லா“மெனத்

தொண்டர் சீர்பரவு சேக்கி ழான்,வரிசை துன்று குன்றைதக ராதிபன்;
றண்ட காதிபதி, திருநெறித்தலைமை தங்குசெங்கைமுகில், பைங்கழற்
புண்டரீகமலர் தெண்ட னிட்டுவினை போக்கு வார்பிறவி நீக்குவார்.
103
சிறப்புப்பாயிரம்
திருக்கிளருங் கயிலைமலைக் காவல்பூண்ட செல்வமலி

திருநந்தி மரபில் வந்து

கருக்குழியி லெமைவீழா தெடுத்தாட் கொள்ளுங் கருணைமிகு

மெய்கண்ட தேவர், தூய

மருக்கிளர்தாள் பரவுமரு ணந்தி தேவர், மகிழுமறை ஞான

தேவ ருக்கன் பாகி

யிருக்குமுமா பதிதேவர் சேக்கிழார்த மிசைப்புரா

ணம்முரைத்தா ரென்ப மாதோ.

- அபியுக்தர் வாக்கு.

திருச்சிற்றம்பலம்
தில்லைமூவாயிரவரி லொருவரும், சந்தானாசாரியர்
நரல்வரிலொருவருமாகிய
உமாபதிசிவாசாரியார் அருளிச் செய்த

சேக்கிழார்புராண மென்னும்
திருத்தொண்டர்புராண வரலாறு முற்றும்.
ஆக திருவிருத்தம்
104
புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 10:03:28(இந்திய நேரம்)