தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

தோரண முதலியவற்றால் அலங்கரித்துப் பூரண கும்பமும் வைத்து தூபதீப
மேற்றிப் பூசித்தனர். வேதியர் வேதமோதி எதிர்கொண்டு வாழ்த்தினர்.
கண்ணாற்காணும் பேறுபெற்றாரெல்லாம் பலவாறும் வாழ்த்தினர். இவ்வாறு
திருவீதி வலம்வந்து அம்பலமுன்றிலிலே யானையினின்றும் இறங்கிச்
சேக்கிழார் பெருமான் தில்லைவாழ் அந்தணரோடு மணையத், திருவம்பல
முன்பு திருமுறையை வைத்து யாவரும் அம்பலவாணரை வணங்கிப்
போற்றினர். சேக்கிழார் பெருமானுக்குத் “தொண்டர்சீர் பரவுவார்“ என்ற
பட்டம் சுமத்தி, ஞானமுடி சூட்டி, மண்டபத்தில் அமர்த்தி, அவரைச் சோழர்
வணங்கினர்

“தோடு செய்ததிரு நெறிய செந்தமிழொ டொக்கும்“ என்றுரை
           தொடர்ந்து,செப்
பேடு செய்து,நட ராசர் சந்தியி லேற்றி னார்க;ளிது பாலிசூழ்
நாடு செய்ததவ!; நீடு குன்றைவள நகரி செய்ததவ!; நிகரிலாப்
பீடு செய்தபகி ரதிகு லத்திலகர் சேக்கி ழார்செய்த பெருந்தவம்!“

அரசன் அதன்பின் சேக்கிழாரது தம்பியராகிய பாலறாவாயர் எங்குற்றார்
என்று விசாரித்தனர். அவர் குன்றத்தூரில் தமது பெயரினாலே திருக்குளம்
அமைத்து அங்குத் திருநாகேச்சரத்திலே திருப்பணி செய்து அமர்ந்தனர்
என்று தெரிந்து அவரை வரவழைத்து அவர்க்குத் தொண்டைமான் என்று
பட்டம் அளித்தனர். அமைச்சுரிமை பூண்டு நாடுகவால் கைக்கொள்ளுமாறு
அவர் வேண்டினர். அவர் தமது நாட்டைவிட்டுவர இசையாமையால்
அங்கிருந்தபடியே அமைச்சுரிமை பூணும்படி அரசர் வேண்ட அவரும்
உடன்பட்டாராய் அரசர்க்குற்ற துணையாய் அமைச்சியற்றினர்.
அக்காலத்திலே தொண்டை நாட்டிலே உண்டாகிய பஞ்சத்தில்
மக்களையெல்லாம் வருந்தாது காத்தனர். அவருக்குத் தொண்டைமண்டலம்
நின்று காத்தபெருமான் என்ற பெயர் எங்கும் பரவியது.

சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலே இருந்து, அறுபத்துமூன்று
நாயன்மார் சரிதங்களை யுணர்ந்து கொண்டு, அடியார்களுடன்
அருந்தவத்திலிருந்து, பின் அம்பலவர் இனித்தமுடைய எடுத்தபாதநிழ
லெய்தினார்.

வாழ்த்து

வாழி தில்லைமணி மன்று ளென்றுநட மாடு மங்கணர் மலர்ப்பதம்!;
வாழி காழிநகர் வாழ வந்ததிரு நெறிய ராதிபதி வள்ளறாள்!;
வாழி யன்பர்திரு நீறு மிட்டதிரு முண்ட முந்துவய கவசமும்!;
வாழி குன்றைமுனி சேவை யாதிதிரு வாய்மலர்ந்தருள் புராணமே!;


சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

பெயரும் இளமையும்

சேக்கிழார்சுவாமிகளது இயற்பெயர் அருண்மொழியார். என்பது அது
இறைவனது திருநாமங்களுள் ஒன்று. சேக்கிழார் குடியிற் பிறந்து, சிறந்து,
அக்குலவிளக்காக நிலவியதனால் இவரைச் சேக்கிழாரென்றே வழங்குவர்.
இளஞ்சேக்கிழார் பழந்தமிழ் நூல்களில் மிக வல்லவராய் விளங்கினார்.
திருக்குறளைப் பெரிதும் பயின்று சிறந்தனர் என்பர்.

புராணம் பாடிய பிற்றைநிலை

சேக்கிழார்சுவாமிகள் பெரியபுராண மரங்கேற்றியபின்
திருத்தில்லையிலே தங்கியிருந்து அப்புராணத்திற் கூறிய சரிதங்களை
உணர்ந்து கொண்டும், திருத்தொண்டர்களுடன் அருந்தவத்திலிருந்து
கொண்டும் சிவபிரானடிநீழல் எய்தினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 13:29:01(இந்திய நேரம்)