தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam


பூமகள் (53) - நிலமகள் (97) - பூமிதேவி எனவும், விட்டுணுவின்
இருதேவியரில் ஒருவரெனவும் பெறுவர்.

பெண்ணை (228) - ஒருநதி. நடுநாட்டிற்கு வளந்தருவது.
சிவபெருமான் பிநாகத்தின் வழி வந்தபடியால் பினாகினி யென்று
பெயருடையது. இதன் தென்பால் திருவெண்ணெய் நல்லூர் உள்ளது.
வடபால் திருத்துறையூரி ருந்தது. அது கால பேதத்தால் இப்போது
தென்பக்கமாயது.

பேரம்பலம் (8) - பேரம்பல மேரு (250) - சிதம்பரத்தில் ஐந்து
சபைகளில் (அம்பலங்களில்) ஒன்று. சிற்றம்பலத்திற்குக் கீழ்பாலின் உள்ளது.
சோமாஸ் கந்த மூர்த்தி முதலிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள இடம்.
முன்னர் அநபாயச் சக்கரவர்த்தியால் பொன்வேயப்பட்டது.

பொன்மாளிகை (250) - தில்லையில் நடராசர் எழுந்தருளும்
ஐந்து அம்பலங்களுள் ஒன்று. பொன்னம்பலம் என்பதும் வழக்கு.

மதி (27 - 307 - 311) - நிலா (253 - 308) - திங்கள் (55 - 245
- 280) - இந்து (252) - மதியம் (321) - சந்திரன், நவக்கோள்களில் ஒன்று.
உலகுக்குத் தூய்மையும் இன்பமும் தண்மையும் தந்து காப்பவன், அமிர்த
சொரூபமானவன். சிவபெருமானது இடது கண். பாற்கடல் கடைந்ததில்
எழுந்ததென்பது புராணம் இறைவன் மதிசூடிய வரலாறு புராணங்களுட்
டேற்றம்பெறக் கேட்கப்படும்.

மயிலாடுதுறை (262) - சோழநாட்டுத் தலங்களுளொன்று. அம்பிகை
மயிலாக வுருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இப்போது மாயவரம்
என்பர். தலவிசேடங் காண்க (பக் - 313).

மருதம் (75) - வயலும் வயல்சார்ந்த இடமும் நிலனாக அமைந்த
திணை,நானிலத்தொன்று. ஐந்திணைகளிலொன்று.

மலயம் (313) - பொதிகை மலை. அகத்தியர் திருக்
கைலாயத்திலிருந்து தென்திசை போந்து தங்கி யிருக்கும் மலை. தென்றல்
பிறக்குமிடம். திருநெல்வேலிச் சில்லாவிலுள்ளது.

மலாடர் (467) - மலையமானாட்டில் வாழ்பவர். மலையமான் நாடு
மலாடு என மருவி வழங்கும்.

மலைநாடு (491) - (496) - சோர்களது நாடு. மலைவள மிக்குடையது.
சேரமான் பெருமாள் நாயனார் அரசுபுரிந்த நாடு. விறன் மிண்டநாயனார்
அவதரித்த பேறுடையது.

மறலியூர்த்தி (113) - இயமனது வாகனம். எருமைக்கடா.

மனுவேந்தன் (98 - 112 - 134) அநபாயச்சோழர் வழிமுதல்
சூரியபரம்பரையில் வந்தோர். திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு
சோழநாட்டை ஆண்டவர். மனுநீதி செலுத்து முறையானே மனுநீதிச்
சோழன் எனப் பெயராக்கிக்கொண்டவர். திருநகரச் சிறப்புச் சுருக்கங்
காண்க (பக் - 163).

மனுநீதி (100 - 102) - தொன் மனுநூல் (122) - சோழ மரபில்
முந்தையாகிய மனு என்பவரால் வகுக்கப்பெற்ற அரசாங்க நீதிமுறைத்
தருமநூல்.

மாணிகுழி (236) - இது நடுநாட்டுத் தலங்களுளொன்று. கருட
நதியின் தென்கரையிலுள்ளது. வாமனாவதாரங் கொண்ட விஷ்ணுமூர்த்தி
மாணிக்கம் வைத்துப் பூசித்த தலம். தலவிசேடங் காண்க (பக் - 274).

மாரன் (290 - 319) - அநங்கன் (282 - 292) - மதனார் (287) -
காமன் (310) - மன்மதனார் (322) - மன்மதன் என்றுங் கூறுவர்.
விஷ்ணுமூர்த்தியின் மனதிற் பிறந்தவன். காதலரிருவருக்கும் நடுநின்று
நேயத்தைப் பெருக்குபவன். இவனது தேவி இரதி. இவனுக்குக், கரும்பு
வில்; வண்டு நாண்; தாமரை - அசோகம் - மா - முல்லை - நீலம்
என்னும் ஐந்து மலர்களும் பாணங்கள்; மீன் கொடி; இலஞ்சிமாலை;
சோலை படைவீடு; மங்கையர் சேனைகள்; தென்னம்பாளை கவரி; தென்றல்


புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 16:09:27(இந்திய நேரம்)