Primary tabs
திருவாரூரினின்றும்
போந்து திருமால் மார்பகத்தில் வைத்துத் தியானிக்கத்
திருப்பாற் கடலிற் பலகாலம் வீற்றிருந்தார். அங்கு நின்றும் இந்நிதரன்
வேண்டிப் பெற்றுத் தேவலோகத்தில் வைத்துப் பல காலம் பூசிக்க
இருந்தவர். பின்னர் முசுகுந்தச் சக்கரவர்த்தியால் மீண்டும் திருவாரூரில்
எழுந்தருளி வீற்றிருக்கின்றவர்.
வீரட்டானம்
(230) - சிவபெருமான் பிரமனது தலையொன்றினைக்
கிள்ளியது - அந்தகாசுரனைக் சங்கரித்தது - திரிபுரமெரித்தது - தக்கயாக
சங்காரம் புரிந்தது - சலந்தரனைக் கொன்றது - யானை உரித்தது -
காமனை எரித்தது - இயமனை உதைத்தது - என்ற எட்டுவீரங்கள் செய்த
எட்டுத் தலங்கள். இவைமுறையே திருக்கண்டியூர், திருக்கோவலூர்,
திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை,
திருக்கடவூர் என்பன.
வெண்ணெய் நல்லூர்
(193 - 195 - 196) வெண்ணெய் நல்லூராய்
(194) வெண்ணெய் நல்லூர்ப் பித்தன் (205) - இங்குள்ள திருக்கோயிலுக்குத்
திருஅருட்டுறை என்று பெயர். நம்பியாரூரரைத் தடுத்தாட் கொண்ட தலம்,
தடுத்தாட் கொண்ட நல்லூர் என்றும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இவ்வூரில் வழக்குவென்ற திருவம்பலம் குலோத்துங்கச் சோழராற்
கட்டப்பட்ட வரலாறு கல்வெட்டுக்களிற் காணப்படும். தலவிசேடங்
காண்க (பக் - 253).
வேட்கோவர்
(371 - 378 - 388 - 392) - குலம் (360 - 376) -
மண்ணுடையார், குயவர் என்பர்.
வேதம்
- இருக்கு (260) -
வேதவாரணம் (340) - மறைச்சிரம்
(351) - அருமறை (354) - இவை நான்கு, இருக்கு - எசுர் - சாமம் -
அதர்வணம் என்பன. வடமொழியிலாக்கப் பெற்றன. இறைவன் இவற்றைப்
பிரமனுக்கு உபதேசிக்கப், பிரமன் இருடிகளுக்கு உபதேசித்தனர் என்பர்.
மந்திரரூபமாயும் தோத்திரரூபமாயும் உள்ளன.
வேதாளம் (20)
- சிவபெருமானது சிவகணப்பூதப் படைகளில்
ஒருவகை.
வேளாண் குலம்
(494) - வேளாளர் மரபு. நில ஆட்சிக்குரிய மரபு.
"வேளாளரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர்" என்று
திருஞானசம்பந்த சுவாமிகள் போற்றியது அறிக. இவர்களது மரபு விளக்கம்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தினும், திருத்தொண்டர் புராண
வரலாற்றினும் காண்க.
குறிப்பு
:- சிவபெருமான், உமாதேவியார், சரசுவதி, சூரியன்,
பிரணவம், சிதம்பரம், திருத்தொண்டர், இசைக்கலைப் பெயர்கள்,
நீதிவழக்குக் கலைப்பெயர்கள், சரியை, கிரியை, யோகம், மாறர்,
விட்டுணுமூர்த்தி, வியாக்கிரபாதர், குபேரன் முதலிய சில பெயர்கள் நூலிற்
காணப்படாதவையாயினும், நூலுட் கண்டவற்றை அவ்வத் தலைப்பின்கீழ்த்
தொகுத்து இலகுவிற் காண உதவுவன; ஆதலின் அவையும் தரப்பட்டன.