தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

மதிப்புரைகளுட்சில

இலங்கை - யாழ்ப்பாணம் - அச்சுவேலி - சரஸ்வதி வித்தியாசாலை
அதிபர்.

"சைவ சாஸ்திர பரிபாலனம்" பத்திராதிபர்

சிவப்பிரம்மஸ்ரீ - ச. குமாரசுவாமி குருக்கள் அவர்கள்

" * * * சைவ நூல்களிற் பரந்த ஞானமும், பற்பல அரிய நூல்களை
வெளியிட்டுதவும் உயரிய நோக்கமும் நிறைந்துள்ள மகோபகாரியாகிய
தாங்கள் அரோக திடகாத்திரராய் நெடுநாள் வாழ்ந்து இன்னும் பல சைவப்
பணிகளைச் செய்யுமாறு எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கின்றேன்.
தங்கள் கடிதத்தையும் பெரிய புராண சஞ்சிகைகளையும் எதிர்பார்க்கின்றேன்.
* * * தங்கள் பெரியபுராண உரை தடுத்தாட்கொண்ட புராணம் - செ. 123
வரை மாத்திரம் என்னிடமிருக்கிறது. இதுவரை தாங்கள் அச்சிட்ட மிகுதிப்
பாகத்தை இந்தக் கடிதம் கண்டவுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்
கொள்கிறேன். * * *"


மதுரை - திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ - மகா சந்நிதானம் திருஞானசம்பந்ததேசிக பண்டார
சந்நிதியவர்கள்
அன்போடு ஆசீர்வதித்தெழுதிய திருமுகம். (மதுரை, 2-6-1938)

ஸ்ரீ சைவசமய கர்த்திரு சர்வஞ்ஞ பீடாரூட ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஞான
சம்பந்ததேசிக சுவாமிகள் கிருபாகடாக்ஷத்தினாலே நன்மை பெருகுக. * *

தாங்கள் அன்புகூர்ந்து அனுப்பிய பெரியபுராணத் திருமலைச் சருக்கம்,
தில்லைவாழந்தணர் சருக்கங்களடங்கிய முதற்பகுதியைக் கண்ணுற்றுக்
களிபேருவகை அடைந்தனம். இப்பெரிய புராணத்திற்கு ஸ்ரீ சிவஞான
சுவாமிகள் காலமுதல் இன்றுவரை இருந்த மகாவித்துவான்கள் உரை
செய்யவேண்டுமென்னும் அவாவுடனிருந்தும் திருவருள் கூட்டிவைக்காது
மறைந்தனர். இப்பெருங் காப்பியத்திற்கு உயரிய பேருரை இல்லாதது பெருங்
குரையே. இவ்வரிய செயற்கரிய செய்கையைச்செய்துமுடிக்கத், தங்களுக்குக்
கிடைத்த திருவருட்டிறத்தை நினைக்குந்தோறும், சைவப் பயிர் வளர்க்கும்
ஒரு வெண்முகிலை இறைவன் கொடுத்துக் காத்ததாக நினைக்கிறோம். * *

தாங்கள் மேற்கொண்ட திருப்பணி இனிது நிறைவேறுமாறு எல்லாம்
வல்ல ஆலவாய் அங்கயற்கண் மங்கை மணாளன் திருவருள் பாலிப்பாராக.

குருபூஜைத் திருமுகம் இத்துடன் வருகிறது. திருஞானசம்பந்தப்
பெருமானின் குருபூஜை விழாவில் தாங்களும் கலந்து பெருமானின் திருவருட்
பேற்றுக்கு ஆளாவீர்களென்று எதிர்பார்க்கிறோம்.


திருக்கைலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்துத் திருக்கூட்டத்
தம்பிரான்களில்
ஒருவரும், மேற்படி ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடவூர்
தேவஸ்தானம்
டிரஸ்டி ஸ்தானிகருமாகிய

ஸ்ரீமத் - இராமலிங்கத் தம்பிரான்சுவாமிகள்
ஆசீர்வதித்து எழுதிய திருமுகம் - 14-6-38

நந்தொன்மைச் செந்தமிழ் - நூல் பலவற்றுள்ளும் தலை சிறந்து
விளங்கும் பெரிய புராணமென்னும் திருத்தொண்டர் புராணத்துக்குக்,

 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 16:28:46(இந்திய நேரம்)