தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

சோனார் - 1081. தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தர்கள் மரபில் சேரர்
மரபு ஒன்று. இதனைச் சேர்ந்த அரசர்கள் சேரர்கள் எனப்படுவர்.

சேய்ஞலூர் - 1206. சண்டீச நாயனார் அவதரித்த தலம். தலவிசேடம்
(பக்கம் 1616) பார்க்க; சேய்ஞலூர்ப் பிள்ளையார் - 1242, 1263.

சைவம் - 1012. சிவசமயம். சித்தாந்த முதற் சைவ சமயம். உலகெங்கு
நிரம்பிய சைவம் 1012. முதற் சைவம் 1006.

தமிழ் - 970. அருந்தமிழ் 1095. தமிழ்மொழி மிகப் பழமையும்
பெருமையும் வாய்ந்தது. ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ் 970; உரை
பார்க்க. சால்பாய மும்மைத் தமிழ் 971. மெய்ம்மைப் பொருளாந் தமிழ்
நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருள்
974.

தாயனார் - 907. அரிவாட்டாய நாயனார். அறுபான்மும்மை
நாயன்மார்களுள் ஒருவர்.

திங்கள் - 691. மாமதி 707. சந்திரன்.

திருக்கழக்குன்றம் - 1091. தொண்டை நாட்டில் தேவாரப்
பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1413).

திருக்காமக் கோட்டம் - 1148. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மையார்
எழுந்தருளி யிருக்கும் தனிப்பெருங் கோயில். பக்கம் 1473 பார்க்க.

திருக்குறிப்புத்தொண்டர் - 1077. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

திருத்தலையூர் - 1031 - உருத்திரபசுபதி நாயனாரின் தலம்.
தலவிசேடம் (பக்கம் 1352) பார்க்க.

திருத்தில்லை - 1060. சிதம்பரம். தலச்சிறப்பு - 238 முதல் 252 வரை
உள்ள திருப்பாட்டுக்களையும் ஆண்டுரைத்தவைகளையும் பார்க்க.

திருப்புன்கூர் - 1056. சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று.
திருநாளைப்போவார் சரிதநிகழ்ச்சியில் ஒருபகுதி நிகழ்ந்த தலம்.
ஏயர்கோனாரிடம் 24 வேலி நிலம்கொண்ட வரலாறு காண்க. "பெயர்த்தும்
பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை" - நம்பிகள் தேவாரம். தலவிசேடம்
- பக்கம் 312 - முதற்பகுதி - பார்க்க. (261)

திருப்பெரும்பெயரிருக்கை - 1152. காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலின்
பெயர். இது கச்சிஆனந்தருத்திரேசர் கோயில் என்ப.

திருமயிலாபுரி - 1117. இது மயிலாப்பூர் என வழங்கும்.
தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1470).
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரமருளி எலும்பைப்
பெண்ணாக்கிய திருத்தலம்.

திருமுல்லைவாயில் - 1095. தொண்டைநாட்டில் தேவாரப் பாடல்பெற்ற
தலங்களுள் ஒன்று. (பக்கம் 1418).

திருவாலவாய் - 974, 999, 1010. மதுரையில் இறைவனார்
எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலின் பெயர். நகரத்துக்கும் பெயராய்
வழங்கும்.

திருவான்மியூர் - 1117. தொண்டைநாட்டில் பாடல்பெற்ற தலங்களுள்
ஒன்று. (பக்கம் 1440).

திருவிடைச்சுரம் - 1090. தொண்டைநாட்டுத் தேவாரப் பாடல்பெற்ற
தலங்களுள் ஒன்று. தலவிசேடம் (பக்கம் 1413) பார்க்க.

திருவெல்லை - 1063, 1065. திருத்தில்லையம்பதியின் நாற்புறத்தினும்
காததூரத்தில் உள்ள எல்லையின் அமைப்பு.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:53:19(இந்திய நேரம்)