தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

செய்யுளணிக்குறிப்புக்கள்

சேக்கிழார் செய்யுளணிக் குறிப்புக்கள்

(இரண்டாம் பகுதி)

குறிப்பு :- இதுபற்றி முதற்பகுதியில் உரைத்தவை பார்க்க.

சொல்லணிகளுட் சில

(தண்டியலங்கார முடையார் பின்வருநிலையைப் பொருளணிகளுள்
வகுத்தனர்.)

பின்வருநிலை. 1. சொற்பொருட் பின்வருநிலை:- சூழும் - 1017;
அளிப்பன - 1032; பற்று 975; 1216; ஒலிக்க - 1190;

2. சொற் பின்வருநிலை :- சூழும் - 553; ஆடும் - 554; பானாறும்
- 834; சாறு - 871; பதி - 872; மங்கலம் 932; ஏந்த - 998; மலரும் 1024;
காஞ்சி 1163;

3. பொருட் பின்வருநிலை - அந்நிலை - ஆனிலை 555; (ஒரு
பொருளின் பல வேறுபாட்டை ஒரு பொருட் பன்மொழியாற் கூறுதல்)
துவைப்பு - முட்டு ... 582; பறழ் - குட்டி ... 675; அடிசில் - சோறு ... 683;
அதிர்வு - ஆர்ப்பு ,,, 1175.

பொருளணிகளுட் சில

1. தன்மை - இதனைப் பொருள் - குணம் - சாதி - தொழில் என
நான்கு வகைப் படுத்திக் கூறுவர். தன்மையணியில் புராணத்தினுட் பல
இடங்களிலும் பலப்பல திருப்பாசுரங்கள் காணலாம். ஒரு சில மட்டும் இங்குத்
தரப்படுவன. இவற்றை உரிய வகுப்புக்களுட் பாகுபடுத்தி அன்பர்கள்
அமைத்துக் கொள்ளக் கடவர். 606; 609; 613; 647; 648; 751; 777; 836 - 840;
938 - 943; 983; 1046 - 1049; 1212; 1251; 1253.

2. உவமை - (1) தொழிலுவமம் - முழையரி யென்ன - 557;
சண்டக்கால் கொண்டு போவார் போல 564; செங்கண்வா ளரியிற் கூடி 572;
இளவரியேறு போல - 578; கடைநாட் பொங்கும் கடலென 582; இறுகான்
மேன்வந்தெழுந்தது போல 583; வெங்கட்புலி - பைங்கட் குறுநரி 617;
அரவனையசரம் - உதவிய பண்பினர் 629; நாய் பொறிகளினளவுள 734;
கன்றகல் புனிற்றாப் போல்வர் 761; வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்
பென்ன 765; விளைத்தவன் புமிழ்வார் போல 772; எரிவாயின் வைத்ததென
796; வேதகத்திரும்பு பொன்னானாற்போல் - 803; உன்மத்தர்போல 823;
கார்பெறு சானம் போல 859; வடமீனே அனையவர் 915; பிறப்பரிவார்
ஒத்தார் 919; நிலையாமை வெல்ல 991; விரைந்தனை வார்களேபோல் 992;
தாயனாள் 1078.

(ஆ) தொழில் பற்றிவந்த விரியுவமம் - தாய்போல் 1099.

(இ) தொழில் பற்றி வந்த இரட்டை யுவமம் - கதிரோனெழ
மழுங்கிக் கால் சாயுங் காலைமதிபோல் 615; 634; 643; கரியிடை புகைவிடு
தழலை நிகர்த்தன 630.

(2) மெய்யுவமம் - வரைபோல் 562; 644; 701; கலைவளர் திங்களே
போல்691; மாமதிபோல707; பிறைபோல்வன - 708; அரியேறன்ன திண்மை
705; ஆளி யேறுபோல 717; மைவரை யென்ன 776; 997; மைக்கற்புரை
நெஞ்சு 982; மாலோகநிலை 1166; பொன்றவ ழருவிக் குன்றம் 585;
மைத்தடங் குன்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 18:00:54(இந்திய நேரம்)