தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சிறப்புப் பாயிரமும் மதிப்புரைகளும்


சிறப்புப் பாயிரம்
5

 

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீன முனிவர் குழாத்தில்ஒருவராகிய

ஸ்ரீமத் - மௌன - சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள்

அருளிய

சிறப்புப் பாயிரம்

தெய்வம் சிவனே சிவனருள் சமயம்
சைவம் சிவத்தொடு சம்பந்த மென்றான்
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி.

- சிற்றம்பலநாடிகள்

அங்கயற் கண்ணி பங்கில் வீற்றிருந்த
செக்கர் வார்சடைச் சொக்க நாயகனை
ஈரெண் டிறத்துப சாரமும் வாய்ப்பப்
பூசனை புரியுந் தேசிக ராகித்
தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும்
திருநக ராக வரசு வீற்றிருந்து
மாநிலம் புரக்கு மாசி லாமணி
ஞான சம்பந்த ஞான தேசிக
அமண்மா சறுத்த கவுணியர் பெருந்தகை
பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்
துள்ளதன் படிவ முணர்த்துவ கடுப்ப
மாநிலத் தமர்ந்த ஞான சம்பந்தன்
பொன்னடிக் கமலஞ் சென்னிவைத் திறைஞ்சதும்.

- குமரகுருபார்

ஆசையறாய் பாசம்விடா யானசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ,சீ
சினமே தவிராய் திருமுறைக ளோதாய்
மனமே யுனக்கென்ன வாய்.

- சிவபோகசாரம்

என்னை யறிவென்றா னென்னறிவி லானந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமு - மென்னையுன்னைப்
பாரா மறைத்ததுவே பாசமென்றா னிம்மூன்று
மாராய்ந் தவர்முத்த ராம்.

ஆய்வார் பதிபசு பாசத்தி னுண்மையை யாய்ந்தறிந்து
காய்வார் பிரபஞ்ச வாழ்கையெல் லாங்கல்வி கேள்வியல்ல
லோய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன் றிரண்டுமறத்
தோய்வார் கமலையுண் ஞானப் பிரகாசன்மெய்த் தொண்டர்களே.

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன; (அதுபோல) உலகம் ஆதிபகவனை (முதற்கடவுளை) முதலாகவுடையது என்பது தமிழ்மறைத் திருக்குறள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 10:43:24(இந்திய நேரம்)