Primary tabs
குள் பேசிக்கொண்ட தனித்தனிப் பேச்சுகளாம் ஊனந்தான் இலராகி - சாவா திருத்தலேயன்றி ஏதேனும் ஊனமும் இல்லாதவராகி. உவந்திருந்தார் - உடல் வாட்டமும் இல்லாமையேயன்றி உளவாட்டமும் இன்றி இருந்தார்.
1370.அடியார்க்கு(ம்) என உம்மை இப்பாட்டில் இருப்பதறிக. ஆண்டவனுக்குப் போலவே அடியார்க்கும் என்க.
1371.வெருக்கொண்டே - வெரு - திடீரென்று தோன்றும் அச்சம். நாயனாரின் பெருமையறியாத சமணர் முதலில் அவரை இகழ்ந்து மதித்தனர். பின்னர் அவர் நீற்றறையில் ஊனமில்லா திருக்கக்கண்டு வெருக்கொண்டனர்; பிறகு (1385) மானமழிந்து மயங்குவர்; இறுதியில் (1440) அரசனால் துறக்கப்பட்டு ஒழிவர் என்று சரிதம் கூறிச் செல்லும் காவிய நயம் காண்க.
1373.களிற்றெதிரே - களிற்றை எதிரே என இரண்டாம் வேற்றுமையுருபு விரிக்க. செப்ப - நீற்றறையிலிட்டும் நஞ்சூட்டியும் தீங்கு நேரிடாமை கண்ட மன்னன் அவனைத்தண்டிப்பது எவ்வாறு என்று திகைத்துக் கூறவும் சமணர்கள் அதையே வினாவாகக் கொண்டு விடையும் கூறினார் என்க. இவ்வாறே "என்ன வாதுமக்கு" என்று பாண்டிய மன்னன் கூறியதையும் வினாவாகக் கொண்டு சமணர் விடையிறுத்ததும் காண்க. (2674 - 2675)
பக்கம். 152 - 153. பதிகப்பாட்டுக் குறிப்புக்கள் : (2) புள்ளின் சிறகு - குரண்டாசுரனது இறகு - (4) குடமால் வரை - மேற்குமலை; அத்தமனமலை - (5) கைக்கொண்ட உரிமையாகக் கொண்ட; (9) வீரட்டம் சூழ்ந்து தாழும் கெடிலப் புனல் - வீரட்டானத்தை வலம் செய்து வணங்கும் கெடில நதி என்பதும் ஒரு நயம்.
1383.அஞ்சி - அஞ்சுவதில்லை என்ற நாயனாரைக் கண்டு யானை அஞ்சியது.
1384.மந்தரகிரி - மேருமலையின் சிகரங்களுள் ஒன்று.
பக்கம் - 164. பதிகப்பாட்டுக் குறிப்பு : (3) விண்ணுற....இல்லையாம் - "சிவ என்னும் நாமமாகிய காட்டுத் தீயில் மாலைபோன்ற பாதகங்கள் எளிதில் சாம் பலாக்கப்படுகின்றன. உண்மை! உண்மை!! ஐயமில்லை!!!" (சிவமகாபுராணம்). (4) விடுக்கிற்பிர் ஆன் என்று வினவுவோம் அலோம் - ஆன் அங்கிருந்து, (அவ்விடுக்கணிலிருந்து) விடுக்கிற்பிர் என்று - விடுவிக்க வல்லிரோ என்று. வினவுவோம் அலோம் - இரக்கமாட்டோம். (6) அருங்கலம் - விழுமிய அணிகலம்; (7) வீடு இன் ஆர் உலகினில் - வீடாகிய இனிய உலகத்திலே; (11) மாப்பிணைத் தழுவிய - பெரிய பெண்மானைக் கரத்தில் பிடித்த. மாதொர் பாகத்தன் - உமாதேவியை இடப்பாகத்திற் கொண்டவன்.
1394.இக்கடல் - கடலை இக்கடல் என்றதனால் பவக்கடலை அக்கடல் என்க. அகரச்சுட்டு உயர்வையும் இகரச்சுட்டு இழிவையும் குறிக்கும். பிறவிக் கடல் மேன்மேலும் தொடர்ந்து வருவதாலும் தாமே தேடி வருவதாலும் வருபவக்கடல் என்றார். இக்கடலிலே நாயனாரைச் சமணர் கொண்டு போய் விட்டனர்; பிறவிக்கடல் தானே வந்து மாக்களை ஈர்த்து உள்ளாக்கிக் கொள்ளுகிறது. இச்செய்யுளில் தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி, வேற்றுமையணி, ஒன்று இரண்டு, மூன்று என்ற எண்ணலங்காரம் ஆகியவை வந்துள்ளன.
1395.கருணை நாவரசு - ஐந்தெழுத்தைத் தியானித்த மட்டில் அமையாமல் அதன் பெருமையை நாமும் அறிந்தோதி உய்யும்படி அருளிய கருணையையுடையவர். இக்கருணைக்கு உருகியே அடியார்கள் நாயனாரை உச்சிமேற்