தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


குறிப்புக்கள்
33

 

பக்கம் - 405 (4) நலியும் - வருத்தும். -(6) வக்கிரன் - தந்திவக்கிரன்.- (9) இத்திருப்பாட்டு "மாலறியா" என்ற திருவெம்பாவைக் கருத்துக் கொண்டது.

பக்கம் - 406 (2) வெள்ளை ஏற்றின் நடையான் - மயிலைக் காளை போன்ற கம்பீர நடையுடையவன்.

பக்கம் - 413.- (2) புரைப்பு இல்லாத - ஆரவாரம் இல்லாத. (3) பூசல் ஆரவாரம்; முறையீடு - (5) "சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்" (திருக்கோவையர்); -(7) தத்துவங்களை முற்றும் கண்டறிபவர் யாருமிலர்; கண்டவரும் அவனைக் கண்டிலர். மெய்ந்நெறியில் நின்றவர்க்கல்லது உள்ளபடியறிய வருவானவன். "கற்க......நிற்க அதற்குத் தக" (குறள்).

பக்கம் - 415. (1) "உரனென்னும் தோட்டியால்" (குறள்).

பக்கம் - 416. (10) இருபதுகள் தோளால் - இருபது தோள்களால்.

பக்கம் - 419. (2) ஸத்ய: பிரசன்ன : ஆததோஷ : என்பவை உடனே அருள்பவர்; விரைவில் அருள்பவர் என்னும் பொருளுடைய சிவநாமங்கள்.- (8) மாவு - மரா (மரம்) கடம்பு.

பக்கம் - 427. (3) நேரிழையை...வென்றானை - "மங்கையோடிருந்தேயோகு செய்வானை" (திருவிசைப்பா).

பக்கம் - 437. (6) கால், அரை, ஒன்று முதல் ஐந்துவரை அமைந்த எண்ணலங்காரம்.

1524.பரமனடியாரானார்கள் எல்லாம் எய்தி என்க....எல்லாம் - உணவு வகைகள் எல்லாவற்றையும் என்க. "படிக்காசொன்றுங் கொண்டு கருதிய எல்லாம் கொள்ளவேண்டி." (2466)

பக்கம் - 439. (1) காதலன் - காதலிப்பவன். வாடலன் - வாடச் செய்பவன். (5) கீழ் நின்ற வல்வினை - முற்பிறவிகளில் ஈட்டப்பெற்ற வல்வினை. "கீழ்ச்செய் தவத்தால்" (திருவாசகம்);- (8) எரியினார் இறைவர் - அக்கினி ஹோத்திரம் செய்தர்க்குரிய அந்தணருக்குத் தலைவர்.

பக்கம் - 444. (1) கட்டங்கம் - கட்வாங்கம். எலும்பை நுனியில் உள்ள ஓராயுதம். காபாலியர் மாவிரதியர் கையிலிருப்பது.

1540. பேழ்கணித்தல் - கண்ணை மிக விழித்துத் திகைத்தல்; முழிப்பது என்பது உலக வழக்கு. பேழ் = பெருமை. பேழ் கணித்தல் = பெரிதாய் விழித்தல்.

1563.தூரறுத்தல் - நச்சுச் செடியை வேரறக் களைந்தாற்போலச் சமணர் மீண்டும் அங்கு முளைக்காதபடி அறவே நீக்குதல். தூர் = வேர்.

1564.விளக்குதல் - பிராயச்சித்தம், புண்யாவாஹம் முதலியவை செய்தல்; தூய்மை செய்யும் மாறு "விளக்குமறு" எனப்படுதல் காண்க.

பக்கம் - 514. (5) துறும்பு - செறிந்த. (6) ஊர்வன - மேல் எழுவன; "இடுக்கண்......அடுத்து ஊர்வது" (குறள்) என்றதில் காண்க.- (6) குறும்பி - வியார்வை, கோழை போன்ற கழிவுப் பொருள்கள் - (7) உடம்பு செய்யும் பேரிடரினை மறந்து என்க - புறஞ்செய் கோலக்குரம்பை - உள்ளே அசுத்தம் நிறைந்து வெளியே அலங்கரிக்கப்படும் உடம்பு.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:38:05(இந்திய நேரம்)