Primary tabs
பக்கம் - 567. l. (6) இடியபலி - இட்டபலி - இடு+இ(ன்)+அ.
பக்கம் - 570. lV. (10) இப்பாடல் உருவகதீவக அணி. - V. (1) ஒற்றியூரும் - மறைந்திருந்து பார்த்து ஊர்ந்து செல்லும்.
பக்கம் - 575. (3) காறுகண்டத்தர் - காறையணிந்த கழுத்தர். "கண்டத்தின் வெண் மருப்பின் காறையோனே".
1614.மானம் - வீரம்; விமானமுமாம்.
1615.சூல அயில் - சூலவேல் என்பர்.
1616.நெடுங்கதிர் கோலுசோலை - சூரியனது நீள்கதிர்கள் முற்றுகையிட்ட சோலைகள். "பருதியஞ் செல்வன் கதிர் நெடுந்தானைக்கிருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்" (மணிமேகலை). "வெயிற் கெதிர்ந்திடங் கொடாதகங் குளிர்ந்த பைம்பொழில்" (பிள்ளை - தேவா - திருத்துருத்தி)
1621.வெங்கதிர்ப்பகல் - "எங்குமிக்க பிளப்பின் வெய்யவன் கதிர் கை பரந்து நாகர்தம் எல்லை புக்கு எரிகின்றவை, பொங்கும் அழல் தெருகின்ற பாலையிலே வெந்நிழல் புக்க சூழலைத் தேடிப்புகும் பகலவனது செங்கதிர்க்கனல் போலும் அத்திசையிலே வெங்கதிர்ப் பகலிலே திண்மை மெய்த்தவர் எய்தினார் என்று கூட்டியுரைத்துக்கொள்க. "நிலவெடிப்பிலே பாலைக்குப் பகையாகிய நிழல் அஞ்சிப் புகவும் அதைவிடாமல் துரத்திவந்த சூரிய கிரணங்கள் தாமும் அப்பிளவுகளுள் நுழைந்தன" என்று தற்குறிப்பேற்ற அணிச்சுவைபடக் கூறியது காண்க. அத்தகைய திசையிலே வேணிற்கால நடுப்பகலிலும் நாயனார் சென்றார். சூரியனுக்கு அவன் கதிர்கள் சேனையாகும். தோற்றோடிக் குகையில் ஒளிவேைாரையும் வெய்ய மன்னவன் சேனை தொடர்ந்து சென்று கொல்வதைக் கலிங்கத்துப்பரணி முதலிய நூல்களிற் காண்க. "யாண்டுச் சென்றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட்ட டவர்."(குறள். 895).
1635. பால்தடம் புனல் பொய்கை - பால்போன்ற மிகுந்த நீருடைய
பொய்கை.
பக்கம் - 613.(1) மீளா - பணம் கொடுத்தோபிறவகையிலோ தன்னை அடிமைத் தன்மையினின்றும் மீட்டுக்கொள்ளாதபடி ஆளாக. "மீளா அடிமையுனக்கே." "விற்றுக்கொள்ளீர் ஒற்றியல்லேன்" (நம்பி - தேவா).
1639.பொன்மலைக் கொடியுடன் அமர் - "உமா ஸஹாயம்" என்றபடி உமையாள் கூட. ஸோம = ஸ +உமா - என்பதும் அறிக.
1643. நடுஇடை ஆடி - வலமும் இடமுமாய் நின்ற கூட்டத்தின் இடையே நடந்து சந்நிதியிலே அணுக்கராய் இருப்ப எனலுமாம்.
1645. கண்களால் முகந்துகொண்டு கைகுவித்து - தாம் செய்யவேண்டிய முகத்தாலாகிய வேலையைக் கண்கள் செய்ததால் கைகள் வேலையின்றிக் குவிந்திருந்தன போலும்.
பக்கம் - 637. (1) சகம் அடிமையல்லாது இல்லை என இயையும். (2) நொடிவது - சொல்லுவது எனலுமாம்.(6)
"பொற்சிலைகைச் சிலையருகே தனபதிநின்
திருவாசற் பொருந்து தேவ
நற்றருக்கள் சுரபிசிந்தா மணிமுடிமேல்
நளிர்மதியம் நன்மைக் கெல்லாம்