தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பெரிய புராணம்

 
 
பூண்டுதிகழ் சைவத்தொண் டளவுகடந் தியற்றுபெரும் புலவா வாழ்க
தூண்டுவிழி திகைப்பிக்குங் கண்டிகைவெண்ணீற்றழகா துலங்க வாழ்க.

(8)

வாழ்கவள நிறைகோவை வாழ்கசேக் கிழார்மரபு வாழ்க சைவம்
வாழ்கதொண்டை மண்டலவே ளாளர்முத லியர்குடிகள் வாழ்க தொன்னூல்
வாழ்ககவிக் கோன்கந்த சாமிநம்பி சுப்ரமண்ய வள்ளல் வாழ்க
வாழ்கபசு வீழ்கமழை வளம்பல்கி உலகமெலாம் வாழ்க வாழ்க.

(9)

தருமபுர ஆதீனப் புலவர்,

ஆச்சார்யார்கள்புரம்
1-6-1950

 காமக்கூர்-வித்வான்- முத்து. சு. மாணிக்கவாசக
 முதலியார்,

தலைமைத் தமிழாசிரியர், போர்டு உயர்பள்ளி,
ஆரணி (வடார்க்காடு).

III

"தினசரி" - 5-6-'50

கோவை-சிவக்கவிமணி வக்கீல் - ஸ்ரீ. சி. கே. சுப்பிரமணிய முதலியார் இயற்றிய பெரியபுராணத்திலுள்ள திருஞானசம்பந்தர் புராணம் விரிவுரை அரங்கேற்று விழா, நேற்று ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான வேளூர் தேவஸ்தானம் விசாரணை கட்டளை ஸ்ரீ. சோமசுந்தரத் தம்பிரான் தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஸ்ரீ.திருஞானசம்பந்தர் புராண விரிவுரையை யானையின்மீது நன்கு அலங்காரம் செய்து வைத்துச் சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள பிரபல தேவார ஆசிரியர்கள், மாணவர்கள் தேவார பாராயணம் செய்ய நகர்வலம் வந்தது. சிவக்கவிமணி ஸ்ரீ.முதலியார் தான் இயற்றிய பெரிய புராண விரிவுரை நுணுக்கங்களையும், திருவருட்டுணை என்பதைப்பற்றியும் விரிவாகப் பேசினார். அண்ணாமலை சர்வகலாசாலைத் தமிழ் விரிவுரையாளர் ஸ்ரீ. ஜி. சுப்ரமணியம் பிள்ளை "ஞானக்கண்" என்பதைப் பற்றி பேசினார், சீர்காழி ஸ்ரீ.சீனிவாச முதலியார், துடிசை ஸ்ரீ.சிதம்பரனார், ஆரணி, தமிழ் பண்டிட் ஸ்ரீ.மாணிக்கவாசக முதலியார், சிதம்பரம் தேவார பாடசாலை அதிபர் ஸ்ரீ.சின்னையா முதலியார், ஸ்ரீ.ராமலிங்க ஓதுவா மூர்த்தி ஆகியோர்கள் சிவக்கவிமணி ஸ்ரீ. சி. கே. சுப்ரமணிய முதலியாரின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்கள்.
சீர்காழி கல்விக் கழகத்தின சார்பில் ஸ்ரீ.சொ,சீனிவாச முதலியார், சிவக்கவி மணிக்கு ஓர் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்தார்.
 
புதுப்பிக்கபட்ட நாள் : 14-01-2019 11:27:16(இந்திய நேரம்)