தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சரித ஆதரவுகள் -- முன்சேர்க்கை

 
 
முன்சேர்க்கை 1
 


சிவமயம்

 

திருஞான சம்பந்த நாயனார் சரித ஆதரவுகள்

 

தேவார அகச்சான்றுகளும்
மற்றும் சைவத் தெய்வத் திருமுறைகளிலும்
கல்வெட்டுக்களிலும்
கண்டவற்றுட் சிலவும்
 

 
1. நாயனாரது முன்னைநிலை
 
பிள்ளையார் பிறவியில் வாரா நிலையில் இறைவரை மறவா துட்கொண்டு அவனே தானாகச் சிவனது ஆனந்தத்தில் இருந்த ஓர் முத்தான்மா என்பது ஆசிரியர் பல இடங்களிலும் எடுத்துக்காட்டும் பொருளாகும். "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்" (1953); "பவமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட, நவமலர்ப் பாதங் கூட்டும்" (3142); "உன் பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீ தென்று பாட"(3143) என்பன முதலியவை சிந்திக்கத் தக்கன.
 
 
நாயனார் தேவாரம்
 
 
2-ம் திருமுறை:-
 
"...............திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேற்
பிறக்குமாறு காட்டினாய்; பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்னாய்க் கிழுக்குகின்ற தென்னையே"
 

- துருத்தி - நட்டராகம் - 5

 
"பண்டு நான்செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே"
 

- தக்கராகம் - பாம்புரம் - 10

 
" .......... இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே"
 

- அந்தாளிக் குறிஞ்சி - நல்லூர்ப் பெருமணம் - 8
 

 

2. ஞானப்பா லுண்டருளியதும், இறைவரைச் சுட்டிக் காட்டித் "தோடுடைய செவியன்" என்று பாடியதும் :-
 

 
நாயனார் தேவாரம்
 
 
3-ம் திருமுறை :-
 
"போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்"
 

- கொல்லி - கழுமலம் - 2
 

 
குறிப்பு :- சீகாழிப் பதிகங்களிலெல்லாம் பிள்ளையார் தமக்கு ஞானப்பால் ஊட்டிய அம்மையாரது நினைவுகொண்டு அவரை இறைவரது உடனாகவே வைத்துப் பாடியருளும் உட்குறிப்பினையும் கண்டு கொள்க.
 
 
11-ம் திருமுறை:-
 
" * * * உலகமூன் றுக்குங் களைக ணாகி
முதலில் கால மினிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:43:13(இந்திய நேரம்)