தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Library


முகவுரை

செந்தமிழ் காவியங்களிற் சிறப்புற்றோங்கும் இரக்ஷணிய
யாத்திரிகத்தின் இரண்டாம் பாகம் திரும்பவும் வெளிவந்ததுபற்றி
தமிழபிமானிகள் யாவரும் மகிழ்ச்சியுறுவர்.

இக்காவியத்தின் இரண்டாம் பதிப்பு முற்றுப்பெறும்படி
அரும்பெரும் முயற்சிகள் இயற்றிவந்த கனம் H. A. பாப்புலி
ஐயரவர்கள், சென்னை ஹைக்கோர்ட் ஜட்ஜ் கனம் தேவதாஸ்
அவர்கள், சிறந்த தேசாபிமானியுமான காலஞ்சென்ற K. T. பால்
முதலியோருக்கும், இந்நூல் அச்சுவாகனவேதற்கு உதவிபுரிந்த
சென்னை இந்திய கல்வி அபிவிர்த்தி சங்கத்தாருக்கும் இந்நூலின்
சுதந்தர உரிமையைத் தமிழ்க் கிறிஸ்தவர்களின் நலத்துக்கென
விட்டுக்கொடுத்த வித்வான் கிருஷ்ண பிள்ளையின் குடும்பத்தாருக்கும்
விசேஷமாய் அக்குடும்ப சுதந்தர உரிமையின் பரிபாலகரும் இந்நூல்
இரண்டாம் முறை வெளிவருவதற்கு விசேஷ காரணராக
இருந்தவருமான ஸ்ரீ தாஸ் கிருஷ்ணையா அவர்களுக்கும், தமிழ்
உலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.

உவில்லியம் ஷேக்ஸ்பீயர் என்னும் ஆங்கில கவிராயர் எழுதிய
நூல்களை அவர் காலத்திலுள்ளவர்கள் அத்தனை விசேஷமாகப்
வில்லையென்றும், ஷேக்ஸ்பீயருடைய காலத்துக்கு இரண்டு மூன்று
தலைமுறைக்கு பின்னரே அந்த நூல்களின் பெருமையை இங்கிலாந்து
நாட்டவர் உணர ஆரம்பித்தார்கள் என்றும் சரித்திராசிரியர் கூறுவர்.
மற்றும் வான் ஹென்ரி ஆல்பிரட் கிருஷ்ண பிள்ளையின்
விஷயத்திலும் இவ்விதமே நிகழ்வதாகத் தெரிகின்றது. வித்வானுடைய
காலத்தில் இந்நூலின் பெருமையைத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் அறியாது,
அதற்குப்பின்னரே இரண்டாம் மூன்றாம் தலைமுறைக்குப் பின்னரே
இக்காவியத்தின் பெருமையை உணர்ந்து அதைக்கொண்டாட
ஆரம்பித்திருக்கின்றனர். பக்திர கின்ற இக்காவியத்தைத் தமிழ்க்
கிறிஸ்தவர்களும் பிறரும் பன்முறை பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து
முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவன் அநுக்கிரகிப்பாராக.

பசுமலை                                             பண்டிதர் ஜே.எஸ்.மாசிலாமணி
25-5-31.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:15:56(இந்திய நேரம்)