தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Library

  •  
    * அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
      போஒய் பெறுவ தெவன்

    என்று தெய்வப்புலமை திருவள்ளுவநாயனார் உரைத்தாரன்றோ!
    இல்லறவாழ்வு துறவற இயற்கையை யுடைத்தாயிருக்கவேண்டும்
    என்பதே வித்வானுடைய கருத்து. இதை

    கானம் புகுந்து தனையொறுத்துக் காயம்வருந்திக் கண்மூடி
           மோளம் புரிந்து தவயோகம் முயல வேண்டாம்
    அவரவர்தம்

    தாளம் இருந்தாத் துமபாவ சழக்கைக் கருதித்
    தனைத்தாழ்த்தி

    ஞான குருவின் புண்ணியத்தை நாடவாரும் ஜெகத்தீரே.
    என்று அவர் பாடியுள்ள பாசுரத்தால் அறிக. இத்துணை
    மகாமகோன் னத குணசீலரை மஹாரிஷி என்றழைத்தல்
    தகும் தகும்.

             3 வித்வான் இயற்றிய நூல்கள்.

    இரக்ஷணியம் என்னும் சொல் வித்வானுடைய
    மனதுக்கும் ஹிருதயத்துக்கும் மிக்க ரமிப்பைத்தரத்தக்க பதம்.
    தாம் பாடிய நூல்கள் எல்லாம் ரக்ஷணியம் என்னும்
    சொல்லையே முதலநகக்கொண்ட பெயரையுடையன. தமிழ்
    உலகம் செய்த தவப்பேறாகத் தோன்றிய இந்த
    வித்வசிரோமணி செய்தருளிய நூல்கள் இரக்ஷணிய சமய
    நிர்ணயம், இரக்ஷணிய யாத்திரிகம், இரக்ஷணிய மனோகரம்,
    இரக்ஷணியக் குறள் என்னும் நான்குமாம்.

    1. இரக்ஷணிய சமய நிர்ணயம்.

    தமிழில் சிவஞான சித்தியார் என்று ஒரு நூல் உளது.
    இது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கனுள் ஒன்று.
    இந்நூலாசிரியர் தன் காலத்திலிருந்து இதர மதங்களை
    ஆராய்ச்சி செய்து அவற்றின் குறைகளைக் காண்பித்து தன்
    மதமாகிய சைவமார்க்கத்தின் தன்மையை விளக்கிக்
    காட்டுகிறார். வித்வான் கிருஷ்ணபிள்ளையும் இதே முறையைப்
    பின்பற்றி இதர மார்க்கங்களுடைய குறைபாடுகளைக் காட்டி
    இரக்ஷணிய சமயத்து விசேஷங்களை சிறக்கக் காண்பிக்கிறார்.
    இவ்வாறு பரபக்ஷ கண்டனமும் சுபக்ஷ ஸ்தாபனமும்
    நடாத்துகின்ற இந்நூல் தமது மற்றைய நூல்களைப்
    போலல்லாது வாசக நடையாக இருப்பினும், எடுத்துக்கொண்ட
    விஷயத்துக்குத் தக்கதாகச் சற்றே கடினமான
    நடையையுடையது; சமஸ்கிருத பதங்கள் மிகுதியாய்
    உடையது. இது சம்பந்தமாக பாடப்பட்ட உண்மை வற்புறத்தல்
    என்னும் தேவாரம் இரக்ஷணிய யாத்திரிகத்தின் முடிவிலும்
    காணப்படுகின்றது. இப்பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாடலும்
    இரக்ஷணிய சமய நிர்ணயம் தானிதே என்னும்
    மகுடத்தைக்கொண்டு முடியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:20:05(இந்திய நேரம்)