தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Library

  • கல்வியறிவு ஒழுக்கங்களில் முன்னேற்றமடைந்து வருநாளில்
    சாயர்புரம் மிஷன் கலாசாலைக்கு ஓர் தமிழ் பண்டிதர்
    தேவையாயிருந்தது. அந்த ஸ்தானத்துக்கு அபேக்ஷகர்
    கிருஷ்ணபிள்ளையுட்பட மூவர். இம்மூவரும் பரீக்ஷிக்கப்பட்டபோது,
    கிருஷ்ணபிள்ளையே தெரிந்து கொள்ளப்பட்டு, தமிழ் பண்டிதர்
    உத்தியோகத்தில் அமர்ந்தார். இது 1852ஆம் வருடம் மே மாதம்
    27ஆம் நாள் நிகழ்ந்தது.

    பால்யகாலத்தில் கிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவர்களுக்கு
    விரோதமாய் சில காரியங்களில் சம்பந்தப்பட்டிருந்தனராயினும்
    கிறிஸ்து பெருமானைப் பற்றி அறிந்தவரல்லர். கிறிஸ்தவர்களுடன்
    பழகினவரும் அல்லர். அநேக ஆண்டுகளுக்குமுன்னே தனது
    கிராமத்துக்குப் பிரசங்கிக்க வந்த கிறிஸ்தவ பிரசங்கிமார்கொடுத்த
    அருள் அவதாரம் என்னும் கைத்தாள் பிரதி ஒன்றுதான் அவர்
    கிறிஸ்துமதத்தைப்பற்றி அறிந்திருந்தது. அதை வாசித்து
    விஷ்ணுவின் தசாவதாரக் குறைகளை அறிந்தாரேயல்லாமல்,
    கிறிஸ்து பெருமானின் அருளவதாரத்தின் பரிபூரணத்தை
    அறிந்தாரில்லை. கிருஷ்ணபிள்ளை சாயர்புரத்துக்கு வந்ததுமுதல்,
    கிறிஸ்துமதச் செல்வாக்கு அவர்மேல் படிப்படியாய்ச் சென்றது.

    (1) சாயர்புர மிஷன் கலாசாலைத் தலைவரான மிஷனெரி
    இவருக்குக் காட்டிய அன்பு இவருடைய இருதயத்தைத் தொட்டது.
    இந்த மிஷனெரி வித்வானுக்குக் கிறிஸ்துமார்க்கத்தைப்பற்றிச்
    சிலபல விஷயங்களைச் சொல்லிவந்தனர். 'அவர்கள்
    பட்சத்தோடும் அளபோடும் போதிக்கிற அருமையான
    வார்த்தைகள் ஆரம்பத்தில் எனக்கு வெறுப்பாயும் கசப்பாயும்
    இருந்தாலும் நாளடைவில் அவர்கள் காட்டிய நற்குண
    செய்கைகள் என் மனதில் ஊன்றி அவர்களைத் தடுத்துப்
    பேசாமலிருக்க என்னை ஏவினது' என்று கிருஷ்ணபிள்ளை
    தாமே கூறியிருக்கிறார்.

    (2) கிறிஸ்தவ வேதாகமம் ஒன்றைப்பெற்று அதை வாசிக்க
    ஆரம்பித்தார். வேதாகமத்தில் கிறிஸ்தவர்களுக்கு
    அதிவிசேஷமான பாகம் சுவிசேஷங்கள் என்பதை அறியாது,
    இவர் பழைய ஏற்பாட்டில் ஆதியாக மத்தை வாசிக்கத்
    தொடங்கி முதல் இருபது அதிகாரத்தை வாசித்து அதில் உலக
    சிருஷ்டிப்பு பாவவருகை ஜலப்பிரளயம் முதலிய விருந்தாந்
    தங்களைக் கண்டார்.

    (3) இக்காலத்தில் வித்வானுக்குக் கிறிஸ்தவர்களுடைய
    சகவாசம் அதிகமானது. வேத அறிவும் அதிகப்பட்டது.
    வைஷ்ணவமார்க்கத்திலிருந்த பக்திவைராக்கியமும் நித்ய
    கர்மானுஷ்ட விரதங்களின் மேலுள்ள பற்றும் வரவரக்
    குறைவுபட்டன.

    (4) இனி இவருடைய மனமானது ஒரு நிலையில் நில்லாமல்
    வாடிச் சோர்வடைந்தது. கிறிஸ்தவர்களுடைய சகவாசத்தையும்
    சம்பாஷணையையும் வெறுத்தனர். மார்க்க ஆராய்ச்சிசெய்ய
    மறுத்தனர். மனச் சாட்சியின் தூண்டுதலைத் தடுத்தனர்.

    (5) இக்காலத்தில் திருநெல்வேலி நாட்டில்
    உயர்குலத்தோரும் கல்வி அறிவு ஒழுக்கங்களில்
    சிறந்தோருமாகிய அநேக ஹிந்துக்கள் தம் மதத்தைத் துறந்து
    கிறிஸ்து சமயப் பிரவேசஞ்செய்தனர். இவர்களில் ஒருவர்,
    பாளையங்கோட்டை கல்விச் சாலைக்குத் தமிழ்ப்
    பண்டிதராயிருந்த ஷண்முகநாதக் கவிராயர். இஃதன்றி ஸ்ரீமான்
    தனக்கோடி ராஜு , ஸ்ரீமான் மனக்காவலப் பெருமாள்பிள்ளை
    என்னும் இருவரும்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:21:09(இந்திய நேரம்)