Primary tabs
பாடல்களும் உள்ளன. 1936 பெப்ருவரி முதல் ஆகஸ்டு முடிய உள்ள 7 மாத நற்போதகங்களில் தொடர்ந்து வெளிவந்து முற்றுப்பெற்றுள்ளன.
திரு அவதாரக் காட்சியை மட்டும் முதலில் எழுதிய ஆக்கியோன் நற்போதக வாயிலாகப் பல்லோரின் வேண்டுதலுக்கிணங்க இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை ஆரம்ப முதல் எழுத முனைந்திருக்கிறார்கள் என்று நிச்சயமாக எண்ண இடமுண்டு.
கிறிஸ்தவக் கம்பன் கிருஷ்ணபிள்ளையும் நற்போதக வாயிலாக முதன் முதல் இயேசு பெருமானின் பாடு மரணத்தை மட்டும் படம் பிடித்துக் காட்டும் 'இரட்சண்ய சரிதம்' என்ற பகுதியை எழுதினார். (1860 ஆகஸ்டு முதல் 1861 மார்ச் முடிய) அதன் பின்பே நற்போதக வாசகர்களால் ஊக்குவிக்கப்பட்டு 1878இல் இரட்சண்ய யாத்திரிகம் எழுத ஆரம்பித்து 1891இல் முழுமையாகப் பாடிமுடித்தார். அவ்வாறே நம் திரு அவதார ஆக்கியோன் அவர்களும் 1936இல் எழுத ஆரம்பித்ததை அவர்தம் ஒய்வு காலமான 8 ஆண்டுகளில் 2367 பாடல்களை 1946இல் பாடி முடித்தார்கள்.
இந்நூலை அச்சுப் பிரதியாக வெளிக்கொண்டு வருவதில் திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்கள் பெரும் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்.
மேலைநாட்டுக் கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு நமக்கே உரித்தான முறையில் நம் மண்ணில் கிளர்ந்தெழுந்த இறை இலக்கியம் 'திரு அவதாரம்' ஆகும்.
திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்கள் தம் தந்தையின் கைப்பிரதியை நூலாக்கியதின் மூலம் தந்தையின் கனவை நனவாக்கியது மட்டும் அன்று, தமிழகத்திற்குப் புதியதொரு இலக்கியப் புதையலையும் எடுத்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்குத் தமிழக இறைமாந்தர் யாவரும் நிறை மனதுடன் நன்றி கூறக் கடன்பட்டுள்ளோம்.
தேம்பாவணிக்கும், இரட்சண்ய யாத்திரிகத்திற்கும் பிறகு கிடைத்த முத்தான மூன்றாம் முத்து திரு
அவதாரம் ஆகும்.
பாளையங்கோட்டை
ஆர். எஸ். ஜேக்கப்,
இணை ஆசிரியர்,
13 - 7 - 79
"நற்போதகம்" & செயலர்,
நெல்லைத் திருமண்டல இலக்கியக் கழகம்