தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

 
வாழ்க்கை வரலாறு

அவ்வின்னல்களை யெல்லாம் நன்மையென ஏற்றுச் சூரங்குடியை விட்டு வெளியேறி நல்லூருக்குச் சென்று குடியேறினார்கள். அங்கே அவர்களது வாழ்க்கை வளம் பெற்றமையால் அவ்விடத்தையே விரும்பி நிலையாகத் தங்கிவிட்டார்கள். அன்னாரது மகன் வழிப் பெயரனான மறைதிரு ஆசீர்வாதம் அவர்கள், திரு. மாணிக்கவாசகம் பிள்ளை - முத்துநாயகம் அம்மை ஆகிய தம்பதிகளுக்கு 1 - 7 - 1865 ஆம் ஆண்டு திருமகனாய்த் தோன்றினார்கள்.

"இந்தக் குழந்தையை எனக்காய் வளர்த்திடு" என்றாற்போல அவரது பெற்றோர் சிறுவயதிலேயே இறைவனின் திருப்பணி விடைக்கென்றே அவரைப் பேணி வளர்க்கலாயினர். இளமை ஏட்டுக் கல்வி இனிதுற முற்றுப்பெறவே, அவர்களுடைய உயர் கல்வி திருநெல்வேலியிலிருந்த C. M. S. கல்லூரியில் தொடர்ந்தது. கல்வியில் ஆர்வங் காட்டிய அளவிற்கு உடற்பயிற்சியிலும், இறையியற் பயிற்சியிலும் ஆர்வங் காட்டினார்கள். அக்காலை தமிழார்வம் உந்தப் பெற்றுத் தமிழாசிரியர்களிடம் உரையாடிப் பழகிய பழக்கம் பிற்காலத்தில் ஒரு காப்பியம் எழுதுவதற்கு வித்திடலாயிற்று. கல்வியும் இனிது கனிந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற பதவி கிட்டுவது அரிதன்று. எனவே அவர்களைத் தேடிவந்த பதவிகள் பலவாம். அவற்றுள் ஒன்று வருவாய்த்துறைப் பணியாகும். அத்துறையில் ஒராண்டுப் பணிக்குப் பின் தம் பெற்றோரது நெடுங்கால விருப்பத்தை நிறை வேற்றுவான் வேண்டி, அப்பணியினைத் துறந்து ஆண்டவனார் திருப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்தார்கள். 1899-ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று ஒர் இறைத் தொண்டராகப் பொறுப்பேற்ற நாள் முதல் திருப்பணியைச் சேரன்மாதேவி, பண்ணைவிளை, திருவில்லிபுத்தூர், பாளையங்கோட்டை, நல்லூர் ஆகிய ஊர்களிலும் ஒய்வுக்குப்பின் சில ஆண்டுகள் உக்கிரமன்கோட்டை, பார்வதியாபுரம். என்னும் சேகரங்களிலும் இலகுப் பணிவிடை சீருஞ் சிறப்புமாய்ச் செய்து வந்தார்கள்.

அவர்கள் பணியின் உச்சநிலை உக்கிரமன்கோட்டைச்சேகரம் என விளம்புதல் மிகையாகாது. அங்கிருந்த இன வேறுபாடுகள் அன்னாரின் அருளுரையால் பகலவன் முன் தோன்றிய பனியாய் மறைந்தன. "அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலில் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" பெரிதன்றோ? அதன்வழி இரெட்டியார் பட்டியில் உயர்தர ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ முனைந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பலப்பல. ஆயினும் திரு S. A. பொன்னையா உபதேசியாரின் உறுதுணைகொண்டு, தம் பொருளையும் செலவிட்டுப் பள்ளியை அமைத்து 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 12:19:39(இந்திய நேரம்)