தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library-முன்னுரை

முன்னுரை

(கழகப்புலவர், செல்லூர்க்கிழார் செ. ரெ. இராமசாமிபிள்ளை)

என்றுமுள தென்றமிழ் மொழிக்கண் நின்று நிலவும் நூல்களுடன்  முதன்மை
வாய்ந்தது  தொல்காப்பியம்; இது,   எழுத்து  சொல்   பொருள்  என்னும்   முப்
பகுப்புடைய  இலக்கணங்களைக்  கொண்டு  திகழ்கின்றது. அதன் வழியாய் அதன் கருத்தை  விரித்தும்  தொகுத்தும்  வகுத்தும்  கூறுகின்ற  இலக்கண நூல்கள் பல.
அவற்றுள்,  ‘நம்பி அகப்பொருள் விளக்கம்‘  என்னும்   நூலும்   ஒன்று.  இஃது, அகப்பொருள்  இலக்கணத்தை   வகைப்படுத்திக்  கூறுகின்றது.   இதற்கு   ஏற்ற
இலக்கியமாகத் திகழ்வது, ‘தஞ்சைவாணன் கோவை‘ என்னும் இந் நூல்.

இதனைச்  செந்தமிழணங்கிற்கு  மணிக்கோவையாக  ஆக்கி   அணிந்தவர்,
‘எய்யா நல்லிசைச் செவ்வேற் சேயால்  ‘பொய்யா மொழி‘  என்று   புகழப்பெற்ற
பொய்யாமொழிப் புலவர் பெருமகனாராவர்.

மங்கலப் பாண்டி வளநாட்டின்கண், தெங்கும் பலவும் செந்நெலும் கன்னலும்
பொங்கிய வளமிகு 1மாறை நாட்டில்,  ‘சந்திரவாணன்‘ என்னும் தோன்றல் ஒருவர்
இருந்தனர்; இவர் கோமாற வர்மர் திரிபுவனச்  சக்கரவர்த்தி குலசேகர தேவருக்கு
அமைச்சராகவும்,  படைத்தலைவராகவும்  புலவர்களைப்  புரக்கும்  புரவலராகவும்
புகழுடன்  விளங்கினார்; இவர்  தஞ்சாக்கூரில்  பிறந்தவராதலால், தஞ்சைவாணன்
என்னும்  சிறப்புப்பெயர்  பெற்றிருந்தனர்.  ஆதலால்  இவர்மீது   அகப்பொருட்
சுவைபலவும்  தோன்றத்  ‘தஞ்சைவாணன் கோவை‘    என்னும்   பெயரமைத்து
இந் நூலைப் பாடி அரங்கேற்றினர்.

இந் நூலின் காலம்  கோமாறவர்மர்  திரிபுவன  சக்கரவர்த்தி   காலமாகிய
கி.பி. 12 ஆம்    நூற்றாண்டு  என்று    கொள்ளக்  கிடக்கின்றது.   அஃதாவது
ஏறக்குறைய இற்றைக்கு 750 ஆண்டுகட்கு முன் பாடப்பெற்றதெனக் கொள்ளலாம்.

நாற்கவிராச  நம்பி  இயற்றிய ‘அகப்பொருள் விளக்கம்‘  அகத்திணைஇயல்
களவியல் வரைவியல்  கற்பியல் ஒழிபியல் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளையும்,
அவைகளின் உள்ளடக்கமான இயற்கைப் புணர்ச்சி முதல் திணைமயக்கம் ஈறாக (53)   


1. மறைநாடு என்பது,  பாண்டிய நாட்டில் கொற்கை,  வல்லம்,  தஞ்சாக்கூர்,
மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள
நாடு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:06:05(இந்திய நேரம்)