தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

--கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் முன்னுரைக் குறிப்புக்கள்


xii

கார்மேகக் கவிஞர்
இயற்றிய
கொங்கு மண்டல சதகம்

விநாயகன் துணை

முகவுரை

கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - வெண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்
கையொத்து நேர்கூப்பு க.

கொங்குமண்டல சதகம் என்பது, தொண்டை மண்டல சதகம். பாண்டி
மண்டல சதகம், சோழ மண்டல சதகங்களைப் போல நூறு கட்டளைக்
கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப்
பாடப்பட்ட ஒரு நூல். இது விஜய மங்கலத்திருந்த கார்மேகம் என்னும் ஒரு
ஜைன வித்துவானால் பாடப்பட்டது. இம் மண்டலத்துப் பண்டைக்கால
நிலப்பரப்பு, தெய்வீக விளக்கம், சித்தர், சமயாசிரியர், முடியுடை வேந்தர்,
குறுநிலமன்னர், வள்ளல், புலவர் மற்றும் பலவகை மாந்தர்களின் நீதி, வீரம்,
கொடை, ஆண்பாலர் பெண்பாலர் கல்வி, நட்பு, கற்பு, நன்றி மறவாமை,
அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்து வந்த அருமை புலவர்களின்
பெருமை இன்னும் பல பழக்கவழக்கங்களைச் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.

இக்கொங்கு மண்டலத்தின் பழைய வரலாறு தெரிந்துகொள்ளப்
பலநாள் முயன்று என்னால் நடத்தப்பட்ட விவேக திவாகரன் என்னும்
மாதாந்தரப் பத்திரிகையிற் சிலமுறை கொங்குஎன்று தலைப் பெயரிட்டு
எழுதிவந்தேன். துணை செய்வாரின்மையால் முடிவு பெறவில்லை. 1912ம்
வருஷத்தில் 40 செய்யுட்களடங்கிய கொங்கு மண்டல சதக
ஏட்டுச்சுவடியொன்று கிடைத்தது. அதில் பழமையான விழுமிய
செய்திகளிருக்கநோக்கிக் கழிபேருவகை கொண்டு தேடியுஞ் சதகமுற்றிலுங்
கிடைக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் அருந்தமிழ்க்கன்னை போலும்
வள்ளன்மைக்கொடி வழியுள்ள பழைய கோட்டைப்பட்டக்காரர் ராவ்பஹதூர்
ஸ்ரீமான் நல்லதம்பிச் சர்க்கரை உத்தமிக்காமிண்ட மன்றாடி யாரைக்
கண்டு என் கருத்தை விளக்கினேன். முறுவலரும்பி அவ்விருப்பம் எனக்கும்
உண்டு அமைந்து செய்யும் பொறுப் பேற்றுக்கொள்வாரைக் காண்கிலேன்
என்று ஒத்த அன்பினராயினர்.

சில நாட்டுப் புலவர்களையும் பல ஏட்டுப் பிரதிகளையும். தருவித்துக்
கொடுத்தனர். 60 செய்யுளுக்கு மேலுள்ள பிரதி மாத்திரங் கிடைக்கவில்லை.
இந்நூலாசிரியரின் நெருங்கிய உறவினரான பூந்துறை ஸ்ரீ பதுமநாப அய்யர்
அவர்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-10-2017 15:11:17(இந்திய நேரம்)