Primary tabs
xv
சிறப்புப் பாயிரம்
மஹா மஹோபாத்தியாய
பிரம்ம ஸ்ரீ உ.வே. சாமிநாத அய்யரவர்கள்
விருத்தம்
தூமலி பயனை நன்குதேர்ந் தெங்குந் துருவியே பலபட வாய்ந்து
பாமலி கொங்கு மண்டல சதகப் பனுவலைப் பதிப்பித்தீந் தனனால்
தேமலி முத்துச் சாமிப் பேர்ப்புலவன் றிருச்செங்கோ டுறைதவத் தினனே.
மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான்
ஸ்ரீமான் - மு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள்
விருத்தம்
தன்பெயரைச் சிவபெருமான்
றிருவாக்கா
லொருபாக்குத் தலைமை யாக
முன்பெயரு மைப்பாட்டிற் சிறந்தகொங்கு
நாட்டிலிசை முதிர்செங் கோட்டிற்
பொன்பெயல்செய் மாரியெனக் கவிமழையை
மிகப்பொழியும் புலவர் மெச்சுங்
கொன்பெயரா தமையாயர் குலத்துமுத்து
சாமிப்பேர் கொண்ட நல்லோன்
சிலவருடந்
தானேயா ராய்ச்சி
செய்தும் பலகலையுஞ் சேரக்கற்ற
நலவருடன் கேட்டறிந்துந் தமிழ்த்தெய்வந்
துணையாக நாளு நின்று
நிலவருடன் பாற்செயவுங் கிடைத்தகொங்கு
மண்டலச்சீர் நீடு நிற்கும்
பலவருடம் போற்பொழியுஞ் சதகநூ
லுரைகண்டு படித்துப் பார்த்து