Primary tabs
திருச்சிராப்பள்ளி S.P.G. கல்லூரித் தலைமைக் கணக்காயனார்
ஸ்ரீமான் மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள்
விருத்தம்
உலகமெலா
நிறையறிவின் கருவிருந்த
தெனும்
பெருமைக் குரிமைசான்ற
அலகில்புகழ்த் தமிழகத்தே யன்பினுக்கோர்
நிலைக்களமாங்
கொங்கு நாட்டின்
நலமலிசீர் தெரிந்துரைக்குஞ் சதகமாந்
தமிழ்நூலை
நான்கா ராய்ந்து
நிலவுபல மேற்கோளும் வரலாறுந்
தோற்றியுரை
நிலவச் செய்தே.
பொறியெழுத்து
வடிவுகொடு போதருமா
புரிவித்தான்
புலமை மிக்கான்
மறியழுத்துங் கரதலத்தா னடியவரைப்
பேணுமுயர்
மாட்சியாளன்
நறைபழுத்த தமிழ் வளரச்
சைவநலத்
தழைத்தோங்க நன்மையான
துறைவகுத்தே யுழைத்துவரு முத்துசா
மிப்பெயர்கொள்
தோன்றல் தானே.
--*--
கோயமுத்தூர் கவர்மெண்டு காலேஜ் தமிழ்ப்பண்டிதர்
ஸ்ரீமான் அ. கந்தசாமி பிள்ளையவர்கள்
விருத்தம்
நினைத்த
மாத்திரை மனம்புரி பவமெலாம் நீங்கும்
கனைத்த வாக்கினாற் புரிபவந் துதிக்குமுன் கழலும்
தனைத் தடங்கணாற் காணுமுன் உடற்பவந் தணக்கும்
அனைத்த மாண்பின தம்மசெங் குன்றெனு மசலம்
இம்ம
லைக்கணே வழிவழியெம்மை யாளுடைய
அம்மை யப்பனாந் தனிமுதல் அர்த்தநா ரீசன்
எம்மை வல்வரம் வேண்டினும் ஈந்து வீற்றிருக்கும்
கொம்மைமா மதிற் றிருக்கொடி மாடச்செங் குன்றூர்.
இத்த லத்தினன் விவேகதி வாகர னெனும்பேர்ப்
பத்தி ரத்தோடு சைவச மாசமும் பரிப்போன்
மெத்து சேதுப திமகா வேந்தருள் பரிசோன்
முத்து சாமிநா மத்தினன் சரிதநூல் முதல்வன்