தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thiruchendur Pillai Tamil Munnurai Page


முன்னுரை

பல்லக்கிலேற்றி அநேக விருதுகள் வாத்தியங்கள் சூழ வெகு சிறப்பாக
நகர்வலஞ் செய்வித்துச் சாமி சந்திதானத்திற் கொண்டுபோய்த் தீர்த்தம்
திருநீறு, சந்தனம், மாலை, பரிவட்டம் முதலியவைகளாலுபசரித் தனுப்பினார். 

அன்று முதல், இவர் முருகப்பெருமான் அன்பிற்சிறந்து, திருவருள்பெற்ற
அருள் வித்துவானாக மதிக்கப்பட்டுள்ளார்.  இவரது திருவாக்காகிய
பிள்ளைத்தமிழ்திருச்செந்தூர்த் திருக்கோயிலில், முருகக்கடவுள் பூசையின்
முடிவில் ஓதுவார்களால் திருப்புகழோடு சேர்த்து ஓதப்பட்டு வருகின்றது.

பிள்ளைத்தமிழ் இருவகைப்படும்.  இவை ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்பன.  இவற்றில் காப்பு முதல் அம்புலிப்
பருவம் ஈறாகவுள்ள ஏழுபவங்களும் இருபாற் பிள்ளைத் தமிழுக்கும்
பொதுவான பருவங்களாம்.  மற்ற மூன்று பருவங்கள் வேறுபட்டு வரும். 
ஆண்பாற் பிள்ளைத் தமிழாயின் சிற்றில், சிறுபறை சிறுதேர் ஆகிய
பருவங்களும், பெண்பாற் பிள்ளைத் தமிழாயின் அம்மானை, நீராடல், ஊசல்
ஆகிய பருவங்களும் அமையப் பாடுவது. 

இனிய மெல்லிய இழுமென்னும் சொற்கள் வாய்ந்த தமிழ்மொழியில்
அவ்வினிமை நலத்தினைச் சுவைமிகுத்துக் காட்டுவது பிள்ளைத்தமிழ்
பாட்டாகும்.  மக்கள் வாழ்நாள் முழுமையிலும் ‘பிள்ளைப் பருவம்’ என்பது
எத்துணை இனிமையானதோ, அத்துணை இனிமையானதே ஏனைத்
தமிழ்பாட்டுக்களிலும் பிள்ளைத்தமிழ்ப்பாட்டு   என்பது.   பிள்ளைப்
பருவம்  களங்கமற்ற  நல்லெண்ணத்தையும்   அவ்வெண்ணத்தின  
வழியே    களங்கமற்ற   தூய அன்பையும் விளைப்பதாய்த்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 01:30:26(இந்திய நேரம்)