Primary tabs
றென்று தொழிலுவமங் காட்டிக் குறித்த அரும்பெறல் அறிவுத்திறல் போற்றும் பொற்புடையதாக இருத்தலை ஓர்க.
பிறாண்டும் இவ் வினை பயன் மெய் உரு முதலியவாம் உவமங்களை யெல்லாம் ஆங்காங்கே இடத்துக்கேற்ப அமைத்துப் பொருந்தக் காட்டியிருக்கும் திறங்கள், அறிந்து அறிந்து இன்புறற்பாலன. கற்பார் அவைகளை ஊன்றிக் கற்றின்புறுக.
(ii) அருஞ்சொல் ஆட்சி:
இவர், தாம் ஒரு பொருளைக் குறிக்குங்கால் அவ்வவற்றின் செவ்விய தன்மை தோன்றப் பண்பியைப் பண்பாகவே உரைத்து இறும்பூதுற அமைத்துத் தருவது இவர்தம் இயற்கை. இவர் தமக்கென அமைந்த இச் சொற் சித்திரங்கள், கற்பார்க்குப் புதுவிருந்தாத அமைந்து இன்பம் தருவதாகும். ‘எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது,’ என்று கூறற்கேற்ற பெற்றிமை மிக்கனவாம். இவர்க்கு இச் சொல்லாட்சிகள், இவர் தேடிக் கொணராது தாமே வந்து பணிபுரிகின்றன. இஃது அருங் கவிஞர்பால் தனித்து அமைந்த செப்பமாகும். அவைகளுட் சில:
காவிரியாறு வற்றா வளமுடையது ; அது, தள்ளா விளையுளை ஆக்குவது; செல்வத்தைப் பெருக்கம் திருவினை யுடையது ; அதன் நீர், அமிழ்தினை ஒப்பது. இதனைச் சுயம்வரத் திருமணங்காணவந்த அரசர்களைத் தோழி ஒருத்தி, தமயந்திக்கு, ‘இவன் இவ்வூர் வேந்தன் ; இவன் இந்நாட்டு மன்னன்,’ என்று சுட்டிக் காட்டுகின்றபோது, சோழ மன்னனை அவளுக்குச் சுட்டிக்காட்டி அறிவிக்குங்கால், இக் காவிரி பாயும் நாட்டு மன்னனெனக் கூறுகின்றாள். அது:
‘பொன்னி அமுதப் புதுக் கொழுந்து’ (சுயம்பர : 134)
என்பது ; ‘காவிரியாற்றின் புதியநீரின் பெருக்கு,’ என்பதே இதன் திரண்ட பொருளாகும். அதன் நீரை, ‘அமுதம்,’ என்றும் அதன் பெருக்க உயர்ச்சியைக் ‘கொழுந்து,’ என்றும் கூறி, நறுஞ்சுவை நயந்தோன்ற அருஞ் சொற்கள் பெய்துரைத்த ஆசிரியரின் அறிவின் சிறப்பை என்னென்பேம்! என்னென்பேம்!
மற்றோரிடத்துத் தமயந்தியின் பேரழகைக்
குறிக்கின்றார். உலகில் மகளிர்களிற்
பெரும்பாலோர் தம்மை உயிரோவியமாகப்
புனைந்துகொள்ளும் நீர்மையராவர்; அவர் தம்மை
ஆடைகளாலும் அணிகளாலும் மணப்பொருள்களாலும் கொண்டு
கூட்டி இயற்கையழகோடு செயற்கையழகும் பொதுள அணி
கொள்வர்; இயற்கை ஒரு பங்கும், செயற்கை பல பங்கும்