Primary tabs
களாக - இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டுந் திரைகளாக - ஓவியங்களாக - காவியங்களாக - கடலெனப் பரந்து கிடப்பனவாகும்.
இவ்விலக்கியச் செல்வங்கள் இன்றேல் நம் பண்டைக்காலத் தமிழ்நாட்டின் காட்சிகளைக் காண்டல் ஒல்லுமோ! அறிஞர்களை - அரசர்களை - வள்ளல்களை - ஏனையோர்வரலாற்றுண்மைகளை - இயற்கைகளை - கடலை - மலையை - விலங்கை-பறவையை-காதலை-அறத்தை - வீரத்தை - ஆக்கத்தை - கற்பனைகளை பிறவேறு நன்னிலைகளை - அறிதல் கூடுமோ! இவ்விலக்கியங்களன்றோ அவைகளை நமக்கு நன்கு விளக்கிக் காட்டும் கண்ணாடிகளாக ஒளிர்கின்றன! இவைகளன்றோ நாட்டை நாடாக்குவன; மக்களை மாண்புடையராக வளர்ப்பன. இதனானன்றோ இவைகளை ஆக்கித்தந்த புலவர்கள் புகழ், என்றும் நின்று நிலவுவதாயிற்று. இதனானே, முனிவர் பெருமான் குமரகுருபர அடிகளார்,
‘கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்தமிழோர்க் கொவ்வான் - மலர்வன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு’
என்றருள்வாராயினார். இவ்வாறான அரும்பெறற் பொருள்களைத் தந்தவர், புலவர் பெருமானாகிய நம் புகழேந்தியார்.
இந்நூற் பெருமை:
இவர் ஆக்கித்தந்த நற்பெருங் காப்பியமே ‘நளவெண்பா’ எனப் பெயரிய இந்நூல். இது வடநாட்டு வேந்தனான நளமன்னன் வரலாற்றைச் சுருங்கிய முறையில் சித்திரித்துக் கட்டுரைப்பது. இஃது ஒரு மன்னன் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதாயினும், இதன்கண் பொதிந்து கிடக்கும் அறம் மறம் மானம் நன்றியறிதல் அன்பு அருள் ஆக்கம் ஊக்கம் காதல் கற்பு முதலிய மக்கட்கு வேண்டும் அறப்பண்பாடுகளும், கற்பனை, வருணனை முதலியவைகளும், கற்பார்க்கு வற்றாத வான்பெரும் அறிவுச் செல்வத்தை வாரிவாரி வழங்கி நன்னிலையில் நிறுத்தி, மகிழ்வுடன் வாழத் துணைபுரிவனவாகும்.
நம் தமிழ்ப் பெரும்புலவர்கள், எதையும் பயனின்றி வெற்றாரவாரமாகச் செய்பவ ரல்லர். அவர் உள்ளுவ வெல்லாம் உயர்வுள்ளலையே கடப்பாடாகக் கொண்டவர்; காய்தல் உவத்தலின்றித் தம் கருத்தைப் பொதிந்துவைத்து உண்மையுரைக்கும் ஒண்மையர் ஆவர். வண்டமிழ்வாணராகிய புகழேந்தியார், நம்மினம், நாடு, கலை வாழ, இந்நூலகத்து அமைத்து வைத்திருக்கும்