தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kumarakurbar Swamygal Prabanda Thirthu


10
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
பிள்ளைத்தமிழென்றவளவிலே தமிழ் பயில்வார் யாவருக்கும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலில் நினைவுக்கு வரும். அப்படியே நீதிநெறி விளக்கமும், மதுரைக் கலம்பகமும் மிக்க சிறப்புப் பெற்றவை. நீதிநெறி விளக்கம் பள்ளிக்கூடங்களில் இன்றும் பாடமாக வைக்கப் பெறுகின்றது. சமயச் சார்பின்றி நீதிகளை உரைக்கும் அதனைச் சிலர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.‘திருக்குறள் பருவத்திலே பெற்ற பிள்ளை’ என்று திரிசிரபுரம் வித்துவான் சி. தியாகராச செட்டியார் அந்நூலைப் பாராட்டுவார். கந்தர் கலிவெண்பாவும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழும் பாராயண நூல்களாக வழங்குகின்றன. அவற்றைப் பக்தியோடு பலர் பாராயணம் செய்து, விரும்பியவற்றையும் முருகன் திருவருளையும் பெற்று வருகின்றனர். சகலகலாவல்லி மாலையைப்போல இனிய எளிய நடையிலுள்ள சரசுவதி தோத்திரம் வேறு இன்மையின் அது மிகவும் சிறப்பாகப் போற்றப்பெற்று வருகின்றது.
குமரகுருபரர் இயற்றிய பிரபந்தங்களாக இப்போது தெரிந்தவை (1) கந்தர் கலிவெண்பா, (2) மினாட்சியம்மை பிள்ளைத்தமிழ், (3) மதுரைக் கலம்பகம், (4) நீதிநெறி விளக்கம், (5) திருவாரூர் நான்மணிமாலை, (6) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். (7) சிதம்பர மும்மணிக்கோவை, (8) சிதம்பரச் செய்யுட்கோவை, (9) பண்டார மும்மணிக்கோவை, (10) காசிக் கலம்பகம், (11) சகலகலாவல்லிமாலை, (12) கைலைக் கலம்பகம், (13) காசித் துண்டி விநாயகர் பதிகம் என்னும் பதின்மூன்றாகும்.
இவற்றுள் கைலைக் கலம்பகத்திற் சில செய்யுட்களே கிடைக்கின்றன; காசித் துண்டி விநாயகர் பதிகம் கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டில் தேவர்பிரான் கவிராயரென்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப்பாயிரம் ஒன்றில் இவர் இயற்றிய பிரபந்தங்கள் பதினான்கு என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மீனாட்சியம்மை இரட்டைமணி மாலை, மீனாட்சியம்மை குறம், சிவகாமியம்மை இரட்டைமணி மாலை என்னும் மூன்று பிரபந்தங்களும் குமரகுருபர சுவாமிகள் இயற்றியனவாக அச்சுப் பிரதிகளிற் காணப்படுகின்றன. ஆயினும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்திலுள்ள பழமையான ஏட்டுப் பிரதிகளிலும் வேறு பழைய ஏட்டுப் பிரதிகளிலும் இம்மூன்றும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 16:19:25(இந்திய நேரம்)