தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

ii

பதிப்புரை

தென்தமிழ் நன்னாட்டுத் தொன்னெறிச் செம்பொருட்டுணி வெனப்படும் சித்தாந்தச் சைவச் செந்நெறி, இதுவே நன்னெறி. செம்பொருள் என்பது சிவபெருமானே. இவனே செம்மேனி எம்மான் எனப்படும் சிறப்பினன். "சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்' எனவும், "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும், செம்பொருள் காண்ப தறிவு" எனவும் வரும் தனித்தமிழ் மறைகளால் மேலது வலியுறுத்தப்படுவது காண்க.

பண்டைத் தமிழ்த் திருநான் மறைகள் மறைந்தபின் அம்மறைகளே தேவாரங்கள் என்று சொல்லும்படி திருமறைக்காட்டில் "அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவம்" திறந்தும் அடைத்தும் வழங்குமாறு செய்தருளிய அருளாளர் ஒருகாலத்திருந்த அப்பர் பெருமானும் சம்பந்தப் பெருமானுமாவர். தென்றமிழ்த் திருமாமுறைகளின் சீரிய விளக்கமாகப் பிற்காலத்துத் தோன்றி நிலவுவது "தாயுமான அடிகளின்" திருப்பாடல்களாகும். இத் தாயுமான அடிகளும் திருமறைக் காட்டுச் செல்வரே யாவர். செந்தமிழ்க் கடலையும், வடமொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்த வல்லவர். அங்ஙனமிருந்தும் சிவபெருமானுக்குத் தமிழ்மொழிக்கண் மிக்க வேட்கையென்பதனைக் கூறுமுகத்தான் தேவாரப் பெருமையினைச் சிறப்பித்துள்ளனர். அது வருமாறு :

"தேவரெலாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட்

   செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக

மூவர் சொலுந் தமிழ் கேட்குந் திருச்செ விக்கே

   மூடனேன் புலம்பிய சொல் முற்று மோதான்."

- தாயு. 42. கல். - 14.

திருமுறைகள், மெய்ந்நூல்க ளெனப்படும் சித்தாந்த நூல்கள் ஆகிய இவையனைத்திற்கும் "கட்டளைக்கல்" லாகத் திகழ்வது தாயுமானவடிகள் திருப்பாடல்களே. அவ்வுண்மைகள் அனைத்தும் இந்நூலின் முன்னுரைக்கண் விளக்கப்பட்டுள்ளமை காணலாம்.

சித்தாந்த சைவத் திறவுகோலாகக் காணப்படும் இந்நூலுக்கு, "1891 ஆம் ஆண்டு சில வித்துவான்களைக்கொண்டு எழுதுவித்த உரையுடன் சென்னை திரு. தி. சம்பந்த முதலியாரவர்களால் பதிப்பிக்கப்பட்டது" ஒன்று. அதன்பின் "1905 இல் அதுபோல் சில வித்துவான்களைக் கொண்டு எழுதுவித்தவுரையுடன்


புதுப்பிக்கபட்ட நாள் : 25-10-2017 12:05:46(இந்திய நேரம்)